ஆற்றைச் சுத்தம் செய்த மாணவருக்கு இதுதான் தண்டனையா? குப்பைத் தொட்டியையும் விட்டுவைக்கவில்லை...
மத்திய பிரதேசத்தில் பொதுப் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி திருடப்பட்டது குறித்து...
பொதுப் பயன்பாட்டுக்காக வைக்கப்பட்டிருந்த குப்பைத் தொட்டி திருட்டு
மத்திய பிரதேசத்தில் தனியாளாக ஆற்றைச் சுத்தம் செய்து பிரபலமான மாணவர் பிட்டு சிங், பொதுப் பயன்பாட்டுக்காக வைத்த குப்பைத் தொட்டி திருடுபோனதாக விடியோ வெளியிட்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தைச் சேர்ந்த பிட்டு சிங் என்ற சுரேந்திர சிங் சௌத்ரி (20) என்பவர் பிஎஸ்சி படித்து வருகிறார். சுற்றுச்சூழல் ஆர்வலரான இவர், தனியாளாக ராஜ்கர் மாவட்டத்தில் உள்ள பியாரோவில் கோயிலுக்கு அருகில் இருக்கும் அஜ்னர் ஆற்றைச் சுத்தம் செய்தார். இவரின் இந்தச் செயலுக்கு நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து பாராட்டுகள் குவிந்தன. வெளிநாட்டுச் செய்தி ஊடகங்களிலும் பாராட்டுகள் வந்தன.
அஜ்னர் ஆற்றைத் தனியாளாக இவர் சுத்தம் செய்தபோதிலும், அந்த ஆற்றில் பொதுமக்கள் நெகிழி உள்ளிட்ட கழிவுகளை மீண்டும் போடத் தொடங்கினர். இதனால் மனமுடைந்த பிட்டு சிங், மீண்டும் ஆற்றைச் சுத்தம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, ஆற்றில் கழிவுகள் போடப்படுவதைத் தடுப்பதற்காக ஆற்றின் ஓரத்தில் இருந்த மரத்தின் கீழே இரு பெரிய குப்பைத் தொட்டிகளை பிட்டு சிங் வைத்தார். பொதுமக்கள் ஆற்றில் குப்பை போடுவதைத் தவிர்த்துவிட்டு, குப்பைத் தொட்டிகளில் பயன்படுத்துவர் என்ற நம்பிக்கையுடன் இருந்தார்.
இந்த நிலையில், குப்பைத் தொட்டி வைத்த சில நாள்கள் கழித்து, ஆற்றுக்கு அவர் வந்து பார்த்தபோது, குப்பைகள் கொட்டுவதற்காக பொதுமக்களின் பயன்பாட்டுக்கு அவர் வைத்திருந்த இரு குப்பைத் தொட்டிகளில் ஒன்று திருடுபோயுள்ளது. இதனைக் கண்டு மனமுடைந்த பிட்டு சிங், அதனை விடியோவாகப் பதிவுசெய்து சமூக ஊடகத்தில் வெளியிட்டுள்ளார்.
குப்பைத் தொட்டி திருடப்பட்டதாகச் சமூக ஊடகத்தில் பிட்டு சிங் வெளியிட்ட பதிவுக்கு பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
ஆற்றின் அருகே காவல்துறை பாதுகாப்பு ஏற்படுத்தி, ஆற்றில் குப்பை போடுவதைத் தவிர்க்க வேண்டும் என ஒருவர் கருத்து தெரிவித்துள்ளார். இதேபோல், ஆற்றில் குப்பை போடுபவர்களுக்கு அபராதம் விதிக்க வேண்டும் என மற்றொருவர் கூறியுள்ளார்.
Summary
Bittu Tabahi places 2 dustbins to curb Ajnar River pollution, one gets stolen the next day
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

