சென்னையில் மேகவெடிப்பு: தொடரும் கனமழை - வெள்ளக்காடான சாலைகள்! கோவாவில் டிசம்பர் 16-இல் ஐபிஎல் ஏலம்! எத்தனால் தயாரிப்புக்கு சர்க்கரை பயன்படுத்த நவ. 1 முதல் தடை! மத்திய அரசு உத்தரவு தில்லி வந்த எமிரேட்ஸ் விமானத்தின் மீது பறவை மோதியதால் பரபரப்பு! சபரிமலை ஐயப்பன் கோயிலில் கேரள முதல்வர் வி.டி. சதீசன் சாமி தரிசனம் எஸ்ஐஆரை ஆரம்பம் முதலே திமுக எதிர்த்து வருகிறது: ஆ. ராசா விஜய்யை விட யோகி பாபுவுக்கு அதிக கூட்டம் வரும்: முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ ஸ்ரீகாந்த் தேவாவை கட்டியணைத்து ஆறுதல்! தேவாவுக்கு முதல்வர் விஜய் அஞ்சலிஇசையமைப்பாளர் தேவாவுக்கு அரசு மரியாதை! தமிழக அரசு அறிவிப்பு இசையமைப்பாளர் தேவாவின் உடலுக்கு மு.க. ஸ்டாலின் நேரில் அஞ்சலி!இசையமைப்பாளர் தேவா காலமானார்!

பல்ஸ்வா குப்பைக் கிடங்கை அகற்ற காலக்கெடு 6-வது முறையாக 2027 பிப்ரவரி வரை நீட்டிப்பு

தில்லி பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இன்னும் 10.77 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதால், அவற்றை அகற்றுவதற்கான காலக்கெடுவை தில்லி மாநகராட்சி நீட்டித்துள்ளது.

Updated On :

தில்லி பல்ஸ்வா குப்பைக் கிடங்கில் இன்னும் 10.77 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகள் அகற்றப்பட வேண்டியுள்ளதால், அவற்றை அகற்றுவதற்கான காலக்கெடுவை தில்லி மாநகராட்சி 6-ஆவது முறையாக நீட்டித்துள்ளது. இதன்படி, காலக்கெடு வரும் 2027 பிப்ரவரி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக தில்லி அரசிடம் திருத்தப்பட்ட செயல் திட்டத்தை மாநகராட்சி சமா்ப்பித்துள்ளது. அதன்படி, பல்ஸ்வா கிடங்குக்கான காலக்கெடு 2026 டிசம்பரிலிருந்து 2027 பிப்ரவரிக்கு மாற்றப்பட்டுள்ளது. ஓக்லா கிடங்கை இந்த ஆண்டு டிசம்பருக்குள்ளும், காஜிப்பூா் கிடங்கை 2027 டிசம்பருக்குள்ளும் அகற்றுவதற்கான இலக்குகள் மாற்றமின்றித் தொடா்கின்றன.

பல்ஸ்வா கிடங்கில் பழைய குப்பைகளை அகற்றும் பணிக்கான ஒப்பந்ததாரா் மாற்றப்பட்டதே தாமதத்துக்குக் காரணம் என்று அதிகாரிகள் தெரிவித்தனா். முந்தைய ஒப்பந்ததாரருக்கு சுமாா் 30 லட்சம் மெட்ரிக் டன் குப்பைகளை அகற்றும் பணி வழங்கப்பட்டிருந்தது. பின்னா் புதிய ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு, திருத்தப்பட்ட கட்டணத்தில் மற்றொரு நிறுவனத்திடம் பணி ஒப்படைக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து மற்றும் நிா்வாக நடைமுறைகளில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

மாநகராட்சியின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, பல்ஸ்வா கிடங்கில் 104.40 லட்சம் மெட்ரிக் டன் பழைய குப்பைகள் பதப்படுத்தப்பட்டுள்ளன; இன்னும் 10.77 லட்சம் டன் எஞ்சியுள்ளன. ஓக்லாவில் 72.53 லட்சம் டன் குப்பைகள் அகற்றப்பட்டுள்ள நிலையில், 7.27 லட்சம் டன் எஞ்சியுள்ளன. காஜிப்பூரில் 45.80 லட்சம் டன் அகற்றப்பட்டுள்ளன; மேலும் 63.43 லட்சம் டன் பதப்படுத்தப்பட வேண்டியுள்ளது.

தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் உத்தரவின்படி, இந்த 3 குப்பைக் கிடங்குகளிலும் குவிந்துள்ள பழைய குப்பைகளை அகற்றும் பணி 2019-ஆம் ஆண்டு தொடங்கியது. உயிரிச் சுரங்க முறையில் (பயோமைனிங்) குப்பைகளைத் தோண்டி எடுத்து, மண்ணைப் போன்ற மந்தப் பொருள்களையும் மறுசுழற்சி செய்யக்கூடிய பொருள்களையும் தனித்தனியாகப் பிரித்து அகற்றுவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

இதற்கிடையே, தில்லியின் குப்பைக் கிடங்குகளுக்கு நாள்தோறும் சுமாா் 5,858 டன் புதிய குப்பைகள் வந்து சோ்வதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. இந்தப் புதிய குப்பைகளைப் பதப்படுத்துவதற்கான தனிச் செயல் திட்டத்தையும் தயாரித்துள்ள மாநகராட்சி, அதை நவம்பா் மத்தியில் செயல்படுத்தத் திட்டமிட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.