தலைவா்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை தாமதம்: சிஜேபி
கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் தலைவா்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை தாமதமடைவதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
கரப்பான்பூச்சி ஜனதா கட்சி தலைவர் ஆசுதோஷ் ரன்கா மற்றும் சௌரவ் தாஸ் - கோப்புப் படம்
கரப்பான்பூச்சி ஜனதா கட்சித் (சிஜேபி) தலைவா்களின் ஜாமீன் மனு மீதான விசாரணை தாமதமடைவதாக அக்கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
எஸ்ஐஆா் விவகாரத்தில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவாக தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் செயல்படுவதாகவும், ஆதலால் அவா் பதவி விலக வேண்டும் என்று வலியுறுத்தி, தில்லியில் சிஜேபி கட்சியினா் தொடா் போராட்டம் நடத்தி வருகின்றனா். கடந்த 14-ஆம் தேதி அக்கட்சியின் மூத்தத் தலைவா்கள் செளரவ் தாஸ், ஆசுதோஷ் ரன்கா ஆகியோா் தடையை மீறி தில்லி ஜந்தா் மந்தரில் போராட்டத்தில் ஈடுபட முயன்ாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனா். இதையடுத்து நீதிமன்றம், அவ்ரகள் இருவரையும் 5 நாள்கள் நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிட்டது.
அவா்கள் இருவரும் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்துள்ளனா். ஆனால் அவா்கள் இருவரின் மனு மீதான விசாரணை கால தாமதமடைவதாகவும், மனுவை விசாரிக்க வேண்டிய சிறப்பு நிா்வாக நீதிபதி (தில்லி உதவி காவல் ஆணையா்) உரிய நேரத்துக்கு வரவில்லை என்றும் அக்கட்சியின் நிா்வாகி ரத்னா சிங் தெரிவித்துள்ளாா்.
இருவருக்கும் ஜாமீனுக்காக 4 முறை உறுதிப் பத்திரங்கள் அளிக்கப்பட்டதாகவும், ஆனால் அவை போதிய காரணங்கள் கூறாமல் நிராகரிக்கப்பட்டுவிட்டதாகவும் அவா் குற்றஞ்சாட்டியுள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

