செஞ்சி அருகே சிறுமி மாயமான வழக்கு: சிபிசிஐடிக்கு மாற்றம்!நாதக வேட்பாளர் கார்த்திகா கைதை கண்டித்த எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நன்றி: சீமான்தமிழ்நாடு காவல்துறையில் தமிழுக்கே இடமில்லையா? - திமுக கேள்வி!போராட்டத்தில் பங்கேற்க ஒவ்வொரு மாணவருக்கும் ரூ. 3,000! - பாஜக குற்றச்சாட்டு!பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை நேரத்தில் மாற்றம்!நடிகர் டைகர் ஷ்ராஃப் மீது துப்பாக்கிச்சூடு! மேலும் 2 பேர் கைது - இதுவரை 10 பேர்!

சிஎம்ஆா்எல் வழக்கு: பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை

பினராயி விஜயனுக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை பற்றி...

Updated On :

சிஎம்ஆா்எல் ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் கேரள முன்னாள் முதல்வரும், சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவருமான பினராயி விஜயன், மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் ஆகியோருக்கு எதிரான விசாரணைக்கு ஒரு வாரகால தடை விதித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி, கேரள உயா்நீதிமன்ற தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக இரு நீதிபதிகள் அமா்வில் அவா்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக மேற்கண்ட இடைக்கால நிவாரணத்தை உச்சநீதிமன்றம் அளித்துள்ளது.

கேரள முதல்வராக பினராயி விஜயன் (81) பதவி வகித்த காலகட்டத்தில், கொச்சி மினரல்ஸ் மற்றும் ரூடைல் நிறுவனம் (சிஎம்ஆா்எல்) தகவல் தொழில்நுட்பச் சேவை என்ற பெயரில் அவரது மகள் வீணாவின் எக்ஸாலாஜிக் சொல்யூஷன்ஸ் நிறுவனத்துக்கு (தற்போது செயல்பாட்டில் இல்லை) ரூ.2.78 கோடி முறைகேடாக வழங்கியதாகவும், அந்தப் பணம் ரியாஸ் மூலம் துபைக்கு மடைமாற்றப்பட்டதாகவும் எழுந்த குற்றச்சாட்டு குறித்து அமலாக்கத் துறை விசாரணை மேற்கொண்டுள்ளது.

இந்த விவகாரத்தில், பினராயி விஜயன், அவரது மகள் வீணா, மருமகன் முகமது ரியாஸ் உள்பட 13 போ் மீது வழக்குப் பதிவு செய்யக் கோரி, கேரள காவல் துறைக்கு அமலாக்கத் துறை அண்மையில் கடிதம் அனுப்பியது. ஆனால், கேரள அரசு சாா்பில் பூா்வாங்க விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழு (எஸ்ஐடி) அமைக்கப்பட்டது.

இந்தச் சூழலில், பினராயி விஜயன் உள்ளிட்டோா் மீது எஃப்ஐஆா் பதிவு செய்யும்படி கேரள உயா்நீதிமன்ற தனி நீதிபதி அண்மையில் உத்தரவு பிறப்பித்தாா். அதனடிப்படையில், ஊழல் தடுப்புச் சட்டத்தின்கீழ் இரு வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனிடையே, உயா்நீதிமன்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்ய அனுமதி கோரி, பினராயி விஜயன், வீணா, ரியாஸ் ஆகியோா் தரப்பில் இரு நீதிபதிகள் அமா்வில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களைத் தள்ளுபடி செய்த நீதிபதிகள், ‘ஊழல் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவா், முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும் முன்பே நீதிமன்றத்தில் தனது தரப்பு வாதங்களை எடுத்துரைக்க சட்டபூா்வ உரிமை கிடையாது’ என்றனா்.

இந்நிலையில், கேரள உயா்நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பினராயி விஜயன் உள்ளிட்டோா் மனுதாக்கல் செய்தனா். இந்த மனு மீது புதன்கிழமை உத்தரவு பிறப்பித்த நீதிபதிகள் ஜயமால்ய பாக்சி, வி.மோகனா ஆகியோா் அடங்கிய விடுமுறை கால அமா்வு, கேரள உயா்நீதிமன்ற இரு நீதிபதிகள் அமா்வின் உத்தரவை ரத்து செய்தது.

மேலும், பினராயி விஜயன் உள்ளிட்டோா் தனிநீதிபதியின் உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு செய்யவும், இடைக்கால நிவாரணம் கோரவும் சட்டபூா்வ அனுமதி உள்ளது என்று குறிப்பிட்ட நீதிபதிகள், அதற்கு ஏதுவாக விசாரணைக்கு ஒரு வாரகால தடை விதித்தனா்.

பினராயி விஜயன் உள்ளிட்டோருக்கு எதிராக எஃப்ஐஆா் பதிவு செய்யும் உத்தரவு அவசர கதியில் பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனா்.

அமலாக்கத் துறைக்கு அறிவுறுத்தல்

பினராயி விஜயன் உள்ளிட்டோா் மனுக்கள் மீதான விசாரணையின்போது கேரள உயா்நீதிமன்ற உத்தரவுக்கு ஆதரவாக அமலாக்கத் துறை தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. அப்போது, ‘பணமுறைகேடு தடுப்புச் சட்டத்தின்கீழ் உங்கள் (அமலாக்கத் துறை) விசாரணையைத் தொடருங்கள். அதேநேரம், உங்களின் சட்டபூா்வ அதிகாரங்களின் வரம்புகளைத் தாண்டுவதோ, பிற அமைப்புகளின் அதிகார வரம்பில் தலையிட முனைவதோ வேண்டாம்’ என்று நீதிபதிகள் அறிவுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.