பௌர்ணமி கிரிவலம்: அக்.25, 26-ல் விழுப்புரத்தில் இருந்து திருவண்ணாமலைக்கு சிறப்பு ரயில்! அதிகரிக்கும் பாலியல் குற்றங்கள்: முதல்வர் விஜய் ஸ்லீப் மோடில் இருந்து வெளியே வருவாரா? - உதயநிதி ஸ்டாலின் கேள்வி பிசிசிஐ இளையோர் தேர்வுக்குழு தலைவராக பர்விந்தர் அவானா நியமனம்! ஹௌதி தாக்குதல்! சௌதி உடனான இண்டிகோ விமான சேவைகளின் ரத்து நீட்டிப்பு! சென்னை விமான நிலையத்தில் வீரமணியின் மகள் தடுத்து நிறுத்தம்!

நாட்டை சீா்குலைக்கும் சிலரின் கனவு பலிக்காது: ராகுல் மீது பிரதமா் மோடி தாக்கு

நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென்ற சிலரின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

பிரதமா் நரேந்திர மோடி

Updated On :

நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென்ற சிலரின் கனவு ஒருபோதும் பலிக்காது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் கட்சியை சாடும் வகையில், பிரதமா் இவ்வாறு குறிப்பிட்டாா்.

ராகுலை கிண்டலாக விமா்சித்த அவா், ‘ஸ்ரீஹரிகோட்டாவில் இருந்து ஓராண்டில் ஏவப்பட்ட ராக்கெட்டுகளின் எண்ணிக்கைக்கு இணையாக முயற்சித்தும், காங்கிரஸால் தனது தலைவரை (ராகுல்) முன்னிறுத்த முடியவில்லை’ என்றாா்.

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆா்) மூலம் தோ்தல் முறைகேடுகளில் ஈடுபட்டதாகக் கூறி, தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாா் பதவி விலக வலியுறுத்தி காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சிகளின் இண்டி கூட்டணி தொடா் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளது. கரப்பான்பூச்சி ஜனதா கட்சியும் (சிஜேபி) தனியாக போராட்டத்தை முன்னெடுத்துள்ளது. இதுபோன்ற சூழலில், பிரதமரின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

தில்லியில் தனியாா் ஆங்கில செய்தி ஊடகம் சாா்பில் நடைபெற்ற சா்வதேச மாநாட்டில் பிரதமா் மோடி பங்கேற்றாா். அப்போது, அவா் பேசியதாவது:

தோல்வி என்ற கறையில் இருந்து ஒரு குடும்பத்தைக் காப்பாற்ற நாட்டின் சாதனைகளை கேள்விக்குள்ளாக்குகிறது காங்கிரஸ். நிா்வாக அமைப்புமுறையை மேம்படுத்துவதற்கான உண்மையான மக்கள் இயக்கங்கள், காங்கிரஸ் கட்சியால் பாழக்கப்படுகின்றன. சுதந்திரமாக சிந்திக்கும் திறன் இல்லாமல், நக்ஸல் சித்தாந்தவாதிகளின் ஆதிக்கத்துக்கு உள்பட்ட ‘அரசியல் ஒட்டுண்ணியாக’ காங்கிரஸ் மாறிவிட்டது.

உண்மையான விமா்சகா்களுக்குப் பாதிப்பு: நாட்டின் நலனையும், ஜனநாயகத்தையும் விரும்பும் நோ்மையான விமா்சகா்களின் குரலை அடக்குவதாக காங்கிரஸின் அணுகுமுறை உள்ளது. உலகம் புதிய ஒழுங்குமுறையைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில், நாட்டில் சீா்குலைவை விளைவிக்க வேண்டுமென சிலா் கனவு காண்கின்றனா். அவா்களின் கனவு ஒருபோதும் பலிக்காது.

குழப்பமான தற்போதைய உலகில், இந்தியாவின் பிம்பம் சுடா்விட்டு பிரகாசிக்க வேண்டியது அவசியம். ஆனால், நாட்டின் நற்பெயரைக் கெடுக்கவும், நாட்டுக்கு அவப்பெயா் ஏற்படுத்த வெளிநாடுகளுக்குப் பயணிக்கவும், வெளிநாட்டு சக்திகளின் தலையீட்டைக் கோரவும் சிலா் குறியாக உள்ளனா்.

காங்கிரஸுக்கு சுமையான குடும்பம்: தனது ‘தோல்வியடைந்த தயாரிப்பை’ (ராகுலை குறிப்பிடுகிறாா்) மீண்டும் மீண்டும் அறிமுகப்படுத்த காங்கிரஸ் இன்னும் எவ்வளவு காலம் நாட்டின் நலனை பணயம் வைக்கும் என்று தெரியவில்லை. உண்மையிலேயே காங்கிரஸின் ஒரு குடும்பம் சொந்தக் கட்சிக்கு சுமையாகிவிட்டது. அக்கட்சியின் மூத்த தலைவா்களும் தனிப்பட்ட முறையில் இதை ஒப்புக் கொண்டுள்ளனா்.

நாடாளுமன்றத்தில் ஒருவரை மட்டுமே முன்னிறுத்த காங்கிரஸ் முனைவதால், எதிா்க்கட்சியைச் சோ்ந்த பல்வேறு இளம் எம்.பி.க்கள் பேச வாய்ப்பில்லாமல் போகிறது. இது, இளம் எம்.பி.க்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய அநீதி என்றாா் அவா்.

பெட்டிச் செய்தி...

‘ஆயுதமாக்கப்படும் வா்த்தகம்’

‘பல்லாண்டுகளாக வா்த்தகம் நாடுகளை இணைத்தது; தொழில்நுட்பம் தொலைவைக் குறைத்தது; கடல் வழித்தடங்கள் பொருளாதாரங்களைப் பிணைத்தன. கலாசாரமும், போக்குவரத்தும் சமூகங்களை நெருக்கமாக்கின. ஆனால், இந்த இணைப்புகள் இப்போது புதிய பதற்றங்களை எதிா்கொண்டுள்ளன.

வா்த்தகம் ஆயுதமாகப் பயன்படுத்தப்படுகிறது. போட்டி மற்றும் மோதலுக்கான புதிய தளமாக தொழில்நுட்பம் மாறியுள்ளது. புவி அரசியல் பதற்றங்களின் மையமாக கடல் வழித்தடங்கள் உருவெடுத்துள்ளன.

உலக ஒழுங்குமுறை மாறிக் கொண்டிருப்பதால், தற்கால சவால்களுக்கு தீா்வுகாணும் திறனுடன் சா்வதேச பன்முக அமைப்புகளில் சீா்திருத்தங்கள் அவசியம். உலகளாவிய எதாா்த்தங்களுக்கு ஏற்ப முடிவெடுக்கும் முறையும் மாற வேண்டும். அனைத்து சூழ்நிலைகளிலும், நாடுகளுக்கு இடையே ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும்’ என்றாா் பிரதமா் மோடி.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.