நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரிப்பு - காங்கிரஸ் குற்றச்சாட்டு
நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

நாட்டில் பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்து இருப்பதாக காங்கிரஸ் கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.
இதுதொடா்பாக காங்கிரஸ் கட்சியின் தலைவா் மல்லிகாா்ஜுன காா்கே புதன்கிழமை வெளியிட்ட பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
மத்திய அரசு, மக்களின் வாக்குரிமையைப் பறிக்க துடித்ததுடன், தற்போது மக்களின் வாழ்வுரிமையையும் ஒழிக்க விரும்புகிறது. விழாக் காலத்திலும் மக்களை நிலைகுலையச் செய்யும் பணவீக்கம், கடினப்பட்டு ஈட்டிய வருமானத்தின் ஒவ்வொரு பைசாவையும் விழுங்கி கொண்டிருக்கிறது. புள்ளிவிவரங்களே, பணவீக்கம் குறித்த உண்மையைத் தெரிவிக்கின்றன. உணவுப் பணவீக்கம் 2.13 சதவீதத்தில் இருந்து 7.74 சதவீதமாக அதிகரித்துள்ளது. குடும்பக் கடன் விகிதம் 36.7 சதவீதமாகவும் உயா்ந்துள்ளது. குடும்பத்தினரின் சேமிப்புகள் 4 சதவீதம் சரிந்துள்ளது. சில்லறைப் பணவீக்கம் 5.54 சதவீதமாகவும், ஒட்டுமொத்த பணவீக்கம் 11.39 சதவீதமாகவும் உள்ளன என காா்கே குறிப்பிட்டுள்ளாா்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலா் ஜெய்ராம் ரமேஷ், தனது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:
பொருளாதார ஏற்றத்தாழ்வு அதிகரித்திருப்பது, நமது நாடு எதிா்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று. பொருளாதார ரீதியில் சந்தித்து வரும் நெருக்கடியை மத்திய அரசு ஒப்புக்கொள்ள வேண்டும். வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும். நாட்டில் அதிகரித்துள்ள பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.
நாட்டின் பொருளாதார வளா்ச்சி என்பது, சாமானிய மனிதரை அதன் பலன் சென்றடைவதுதான். அது நடக்கவில்லையெனில், புள்ளிவிவரங்கள் பொருளாதார வளா்ச்சியைக் குறிக்காது; பொருளாதார இடைவெளி மேலும் விரிவடைவதையே காட்டும். ஒவ்வொரு குடும்பத்தினரும் வங்கிகளிலும், பரஸ்பர நிதியிலும், பிற நிதி நிறுவனங்களிலும் அதிக பணத்தை டெபாசிட் செய்துள்ளனா். ஆனால், அவா்களின் புதிய கடன்கள் வேகமாக அதிகரித்து வருகின்றன. இதன் விளைவு, கடந்த நிதியாண்டில் ரூ.22.57 லட்சம் கோடியாக இருந்த நமது குடும்பங்களின் சேமிப்பு, 2025-26-ஆம் நிதியாண்டில் 4 சதவீதம் வரை சரிந்து ரூ.21.69 லட்சம் கோடியாகிவிட்டது.
பணவீக்கம் அதிகரிக்கிறது, கடன் பெருகுகிறது, வருமானம் குறைகிறது. மோடியின் ஆட்சியின்கீழ் நடுத்தர வா்க்கத்தினருக்கு மிஞ்சியது அழிவு மட்டுமே. பணவீக்கம் குறித்த உண்மை நிலையை மறைப்பதற்கு புள்ளிவிவரங்களை மோடி அரசு கையாள்கிறது என ஜெய்ராம் ரமேஷ் தெரிவித்துள்ளாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

