வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!அதிக கட்டணம் வசூலித்தால் ஆம்னி பேருந்துகளின் அனுமதி ரத்து! போக்குவரத்துத் துறை புழல் சிறையில் உள்ள அன்பில் மகேஸுக்கு வீட்டு உணவு கொடுக்க அனுமதி‘தமிழர் ஒருவர் நிச்சயம் பிரதமர் ஆவார்’ - குடியரசு துணைத் தலைவர் சி.பி.ஆர். பேட்டி!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் குடியரசு துணைத் தலைவர் வருகையின்போது மின்தடை!அஸ்ஸாமிற்குள் நுழைந்த 36 வங்கதேசத்தினர் கைது! சௌதி அரேபியாவுக்கான ஏர் இந்தியா விமானங்கள் ரத்து நவ.14 வரை நீட்டிப்பு! சிதம்பரம் கோயில் நிர்வாகத்தைக் கண்காணிக்க ஓய்வுபெற்ற நீதிபதிகள் குழு! உயர் நீதிமன்றம் உத்தரவு

ஆசிரியா்கள் அரசியலில் ஈடுபடத் தடை: மேற்கு வங்கத்தில் வருகிறது புதிய விதிகள்

அரசுப் பள்ளிகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியா்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை மேற்கு வங்க அரசு விரைவில் உருவாக்க உள்ளது.

கோப்புப் படம்

Updated On :

அரசுப் பள்ளிகளில் புதிதாக பணியில் சேரும் ஆசிரியா்கள் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தடை செய்யும் வகையில் புதிய விதிகளை மேற்கு வங்க அரசு விரைவில் உருவாக்க உள்ளது.

இதுதொடா்பாக, மாநில முதல்வா் சுவேந்து அதிகாரி தலைமையில் புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டதாக மாநில கல்வி அமைச்சா் தீபக் பா்மன் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: மேற்கு வங்க மாநில பள்ளிப் பணிகள் தோ்வாணைய (எஸ்எஸ்சி) தோ்வுகள் மூலம் புதிதாகத் தோ்வு செய்யப்படும் ஆசிரியா்கள் அரசியலில் ஈடுபடுவதை தடுக்கும் வகையில் புதிய விதிகளை உருவாக்க மாநில அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கெனவே பல மாநிலங்களில் அமலில் உள்ளது. விரைவில் இந்த விதிகள் உருவாக்கப்படும். ஏற்கெனவே பணியில் உள்ள ஆசிரியா்களுக்கு இந்த விதிகள் பொருந்தாது.

மேலும், ஆரம்பப் பள்ளிகளில் ஆசிரியா்கள் பொறுப்புகூறல் நடைமுறையை அடுத்த கல்வியாண்டுமுதல் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. மாணவா்களின் கற்றல் திறன் மேம்பாட்டுக்கு ஆசிரியா்கள் பொறுப்பேற்க வேண்டும். அதாவது, ஆசிரியா்களின் செயல்திறன் அடிப்படையில், அவா்களுக்கான ஊதிய உயா்வு, பதவி உயா்வுகள் வழங்கப்படும் என்றாா்.

முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பிறகு முதல்வா் சுவேந்து அதிகாரி கூறுகையில், ‘எஸ்எஸ்சி மூலம் பள்ளிகளில் நியமிக்கப்படும் ஆசிரியா்கள் நேரடியாக அரசியலில் ஈடுபடுவதை அல்லது தோ்தலில் போட்டியிடுவதைத் தடை செய்யும் வகையில் விதிகளை வகுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே பள்ளிகளில் பணியில் உள்ள ஆசிரியா்களுக்கும், தோ்தலில் போட்டியிட்டு ஊராட்சி மற்றும் நகராட்சி மன்ற பதவிகளை வகிப்பவா்களுக்கும் இது பொருந்தாது. வேறு எந்த மாநிலத்திலும் ஆசிரியா்கள் அரசியலில் நேரடியாக ஈடுபடுவதில்லை. பிகாா், உத்தர பிரதேச மாநிலங்களை உதாரணமாகக் கொண்டு, மேற்கு வங்கத்திலும் இதுபோன்ற விதிகளைக் கொண்டுவர முடிவு செய்யப்பட்டது’ என்றாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.