பூந்தமல்லி - வடபழனி மெட்ரோ ரயில் சேவை வழக்கம்போல இயங்கும்!வங்கக் கடலில் அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகிறது 'முரசு' புயல்!உறவு கசந்த பின்னா் பாலுறவு பாலியல் வன்கொடுமை ஆகாது: உச்சநீதிமன்றம்இந்தியாவில் 136.79 கோடி தொலைத்தொடா்பு வாடிக்கையாளா்கள்! 3 மாநிலங்களில் 2,800 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை ஜன.25 முதல் பிப்.28 வரை மக்கள்தொகை கணக்கெடுப்பு: ஆணையா் அறிவிப்பு மத்திய அரசின் நிதி பற்றாக்குறை 42.1% ஆக அதிகரிப்பு: சிஜிஏ வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது ஜிஎஸ்எல்வி - எஃப்18!

என் பாட்டி எனக்கு அளித்த அழகான பரிசு! இந்திரா காந்தியை நினைவு கூர்ந்த ராகுல் பிரியங்கா!

இந்திரா காந்தியின் நினைவு நாளில் ராகுல் காந்தி பகிர்ந்த பாட்டியின் அழகான பரிசு பற்றி...

Rahul recalls 'beautiful gift'

இந்திரா காந்தி நினைவிடத்தில் ராகுல் - PTI

Updated On :

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நினைவு நாளையொட்டி அவரது நினைவிடத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர ராகுல் காந்தி மரியாதை செலுத்தினார்.

முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் நிறைவு நாள் இன்று (அக். 31) அனுசரிக்கப்படுகிறது. இந்தியா முழுவது உள்ள காங்கிரஸ் தொண்டர்கள் அவரது நிறைவு நாளை அனுசரித்து வருகின்றனர்.

தனது பாடியும், முன்னாள் பிரதமருமான இந்திரா காந்தியின் நினைவு நாளில், அவர் சிறுவயதில் தனக்குக் கற்றுக்கொடுத்த உபநிடத மந்திரம் ஒன்றைக் காங்கிரஸ் தலைர் ராகுல் காந்தி நினைவுகூர்ந்தார். இதனை அவர் இந்திரா காந்தி தனக்கு வழங்கிய அழகான பரிசு என்று குறிப்பிட்டார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,

உங்கள் மடியில் அமர்ந்து, இரு கைகளையும் பிடித்துக்கொண்டு, நீங்கள் கூறிய வார்த்தைகளைக் கேட்டு, அதனை மீண்டும் சொல்லிக்கொண்டிருந்தேன்.

'அசதோ மா சத்கமய; தமஸோ மா ஜ்யோதிர்கமய; மத்யோர்மா அம்ருதம் கமய; ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி.'

பாட்டி, நீங்கள் எனக்கு எவ்வளவு அழகான பரிசை வழங்கியிருக்கிறீர்கள்! என்னே ஒரு பரிசு! நான் இதை ஒருபோதும் கற்பனை செய்துகூடப் பார்த்ததில்லை," என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.

ராகுல் காந்தி பகிர்ந்துள்ள இந்த மந்திரம், 'பிருஹதாரண்யக உபநிடதத்திலிருந்து எடுக்கப்பட்டது.

இந்த மந்திரத்தின் சாராம்சம், ஒருவரை அநீதியிலிருந்து சத்தியத்திற்கும், இருளிலிருந்து ஒளிக்கும், மரணத்திலிருந்து அறியாமையை நோக்கி அழைத்துச் செல்லுமாறு சொல்லும் பிரார்த்தனை ஆகும்.

காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி வத்ராவும் தனது பாட்டி இந்திரா காந்தியை நினைவு கூர்ந்தார். அவருடன் சிறுவயதில் எடுத்துக்கொண்ட புகைப்படம் ஒன்றைப் பகிர்ந்துள்ள அவர், இந்திரா காந்தியை வானத்தைப் போலச் சுதந்திரமானவர், கடலைப் போல ஆழமானவர், பூமியைப் போல உறுதியானவர், கனன்று எரியும் நெருப்பை விடவும் பிரகாசமானவர் என்று வர்ணித்துள்ளார்.

இந்தியாவின் முதல் மற்றும் ஒரே பெண் பிரதமரான இந்திரா காந்தி, 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி புது தில்லியில் படுகொலை செய்யப்பட்டார். அவர் ஜனவரி 1966 முதல் மார்ச் 1977 வரையிலும், மீண்டும் ஜனவரி 1980 முதல் தனது மறைவு வரையிலும் இந்தியாவின் பிரதமராகப் பணியாற்றினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.