FOLLOW US

ON GOOGLE DISCOVER

செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!விஜய் பிரதமராவது தவெகவினர் ஆசை; சீரியஸாக எடுக்க வேண்டாம்! பெ. சண்முகம்இனி நியாய விலைக் கடைகளில் ரூ.35-க்கு வெங்காயம் விற்பனை! ஆனால்?நேபாள வெள்ளம்! பலி 1,000-ஐ கடந்தது! 3,900 பேரை தேடும் பணி தீவிரம்! மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறந்துவைத்தார் முதல்வர் விஜய்!

அமெரிக்காவில் 2 தோழிகளை அடுத்தடுத்துக் கொன்றதாக கேரள பெண் கைது!

இரண்டு தோழிகளை அடுத்தடுத்துக் கொன்றதாக கேரள பெண் அமெரிக்காவில் கைது செய்யப்பட்ட சம்பவம் பற்றி..

கேரள பெண் வீடு

கேரள பெண் வீடு

Published On :1 செப்டம்பர் 2026, 2:01 pm IST

கேரளத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், தன்னுடைய இரண்டு நெருங்கிய தோழிகளை அடுத்தடுத்து கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் சம்பவத்தில் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஆகஸ்ட் 28ஆம் தேதி ஒரு சில நிமிட இடைவௌயில் அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் கொலை நடந்ததாகக் கூறப்படுகிறது. கொலைக்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. மூன்று பெண்களும் திருமணமாகி கணவர், பிள்ளைகளுடன் வாழ்ந்து வந்துள்ளனர்.

கொலை செய்யப்பட்ட பெண்கள், திரிசூரைச் சேர்ந்த அஞ்சனா ஹரி (35), திருவனந்தபுரத்தைச் சேர்ந்த மேரி மேத்யூ (40) என்பது கண்டறியப்பட்டுள்ளது. இவர்களுக்கு நெருங்கிய தோழியாக இருந்த கோட்டையத்தைச் சேர்ந்த அனிலா (32), கொலைக்குப் பின்னணியில் இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கலிஃபோர்னியாவில் சாலை விபத்தில் அஞ்சனா பலியான நிலையில் மேரி கத்திக் குத்து காயத்துடன் சான் ஜோஸ் பகுதியில் உள்ள வீட்டில் சடலமாக மீட்கப்பட்டார்.

முதற்கட்ட விசாரணையில், நீல நிறக் காரில் வந்து விபத்தை ஏற்படுத்திய பெண் கைது செய்யப்பட்டார். விபத்து நடந்த விதம் குறித்து விசாரணை நடந்து வருகிறது.

அடுத்து கொலை செய்யப்பட்ட மேரியை, மிகவும் நெருக்கமானவர்தான் கொலை செய்திருக்கிறார் என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொலையிலும் அனிலா மீது சந்தேகம் எழுந்துள்ளது. மிகவும் நெருங்கிய தோழிகளான மூவரும் அண்மையில் ஓணம் பண்டிகையை ஒன்றாகக் கொண்டாடிய நிலையில் இந்த கொலை நடந்திருப்பது பலரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

மூவரும் தங்களது கணவர் மற்றும் பிள்ளைகளுடன் தனித்தனியாக வாழ்ந்துள்ளனர். அஞ்சனா பள்ளி ஆசிரியை, மேரி பொறியாளராக இருந்துள்ளார். இவர்களுக்குள் என்ன பிரச்னை இருந்துள்ளது என இவர்களது கணவர்களுக்கும் தெரிந்திருக்கவில்லை.

Summary

Kerala woman who killed two female friends in succession arrested in the US.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.