கல்லணையை திறந்து வைக்கிறாரா முதல்வர் விஜய்? அமைச்சர் வினோத் பதில்மாணவி தற்கொலை; மாணவர் தற்கொலை முயற்சி! பொறியியல் கல்லூரிக்கு விடுமுறைஇல்லாத டயர் ஆலையை மூடுவது பற்றி பேரவையில் விவாதம்! எக்ஸ் தளத்தில் கீர்த்தனா விளக்கம்!!புதுச்சேரி நீதிமன்றத்தில் ஆஜர்! குற்றப்பத்திரிகையை பெற்றுக் கொண்டார் அமைச்சர் மரிய வில்சன்!கஜானா காலி; உங்கள் போராட்டத்தால் முதல்வருக்கு தூக்கம் வருவதில்லை! அமைச்சர்கள் பேச்சுபோராட்டத்தில் ஈடுபட்டுள்ள தூய்மைப் பணியாளர்களுடன் அமைச்சர்கள் பேச்சுவார்த்தை!நேபாள வெள்ளம்! பலி 1,290 ஆக உயர்வு; 10-வது நாள்களாக மீட்புப் பணிகள் தீவிரம்!நேபாள வெள்ளம்! 9 நாள்களுக்கு பிறகு உயிருடன் மீட்கப்பட்ட இருவர்!

2027-ல் பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் மீண்டும் ஆட்சியமைக்கும்: யோகி ஆதித்யநாத்

2027-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 'பெரும் பெரும்பான்மையுடன்' மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என யோகி ஆதித்யநாத் கூறியிருப்பது தொடர்பாக...

with a grand majority

உத்தரப்பிரசேச மாநில முதல்வர் யோகி அதித்யநாத் - கோப்புப்படம்

Published On :4 செப்டம்பர் 2026, 4:15 pm IST

மதுரா: உத்தரப் பிரதேசத்தில் 2027-ல் நடைபெறும் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக 'அறுதிப் பெரும்பான்மையுடன்' மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அந்த மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

மதுராவில் நடைபெற்ற 'பஞ்சாயத்து ஆஜ் தக்' நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய முதல்வர் யோகி ஆதித்யநாத், நம்பிக்கை எவ்வாறு பொருளாதார செழிப்பாக மாறுகிறது என்பதைக் காட்டும் 'பிரகாசமான உத்தரப் பிரதேசத்தை' முன்னிறுத்தி, 2027 சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் "இரட்டை என்ஜின்" அரசு சிறப்பான வெற்றியைப் பெறும் என்று கூறினார்.

தனது அரசின் நலத்திட்டங்கள் மற்றும் வளர்ச்சித் திட்டங்களால் பயனடைந்த இளைஞர்கள், பெண்கள், விவசாயிகள் மற்றும் தலித் என பயனாளிகள் யாராக இருந்தாலும், அவர்கள் அனைவரும் 2027-ல் நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர்ந்து பாஜவுக்கு ஆதரவளிப்பார்கள் என்றும், பாஜக 'அறுதிப் பெரும்பான்மையுடன்' வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.

2022 தேர்தலுக்கு முன்பும் இதேபோன்ற கணிப்பை வெளியிட்டிருந்ததாக கூறிய யோகி ஆதித்யநாத், அரசுத் திட்டங்களால் பயனடைந்தவர்கள் மீண்டும் பாஜகவுக்கு வாக்களிப்பார்கள் என்று நம்பிக்கை தெரிவித்தார்.

மாநிலத்தின் வளமான மத மற்றும் கலாசார பாரம்பரியம் சுற்றுலா மற்றும் பொருளாதார நடவடிக்கைகளுக்குப் பெரும் முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளை உருவாக்கியுள்ளதாகக் கூறிய அவர், இதற்கு உதாரணமாக 'ப்ராஜ்' பிராந்தியத்தைக் குறிப்பிட்டார்.

2025-ல் உத்தரப் பிரதேசத்திற்கு மட்டும் 156 கோடி பக்தர்கள் வருகை தந்தனர் என்றும், ப்ராஜ் பிராந்தியத்திற்கு மட்டும் 11 கோடி பக்தர்களும் சுற்றுலாப் பயணிகளும் வருகை தந்தனர் என்று அவர் கூறினார்.

இவ்வளவு அதிகமான வருகை, நம்பிக்கையையும் பொருளாதாரத்தையும் இணைப்பதில் நாட்டிற்கும் உலகிற்கும் ஒரு புதிய அனுபவத்தை அளித்துள்ளது. இந்த மாற்றம், அணுகுமுறையில் ஏற்பட்ட மாற்றத்தின் விளைவாகும் என்று ஆதித்யநாத் தெரிவித்தார்.

சவால்களைக் கண்டு பின்வாங்காமல், அந்தச் சவால்களுக்குள் வாய்ப்புகளைக் கண்டறிந்து, அவற்றை தீர்வுகளை நோக்கி முன்னெடுத்துச் செல்பவர்களே வெற்றியின் புதிய அளவுகோல்களை உருவாக்குகிறார்கள் என்று அவர் கூறினார்.

உத்தரப் பிரதேசம் இப்போது முதலீட்டிற்கு உகந்த மாநிலமாக உருவெடுத்துள்ளதாகவும், அரசின் கொள்கைகளைப் பின்பற்றும் முதலீட்டாளர்கள் சலுகைகளைப் பெறத் தகுதியுடையவர்கள் என்றும் யோகி கூறினார்.

எங்களிடம் முதலீடு, திறன் மேம்பாடு மற்றும் வேலைவாய்ப்புக்கான வசதிகள் உள்ளன. இப்போது அனைத்தும் இணையம் வழியாகவே நடைபெறுகின்றன. தனது அரசு 9.5 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை வழங்கியுள்ளதாக ஆதித்யநாத் கூறினார்.

Summary

Uttar Pradesh Chief Minister Yogi Adityanath has said that the BJP's "double-engine" government will secure a comfortable victory in the 2027 polls

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.