
உ.பி.யில் சர்க்கரை தட்டுப்பாடு இல்லை: முதல்வர் யோகி ஆதித்யநாத்
உத்தர பிரதேச சர்க்கரை தட்டுப்பாடு குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் விளக்கம்....

யோகி ஆதித்யநாத் - கோப்புப் படம்
உத்தர பிரதேச மாநிலத்தில் சர்க்கரை தட்டுப்பாடு எதுவுமில்லை என்று முதல்வர் யோகி ஆதித்யநாத் சனிக்கிழமை தெரிவித்தார்.
மேலும் சர்க்கரை கிடைப்பது குறித்த கவலைகள் தேவையில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். ஆய்வுக் கூட்டம் ஒன்றில் பேசிய அவர், மாநிலத்தில் உள்ள சர்க்கரை ஆலைகளில் தற்போது 179.38 லட்சம் குவிண்டால் சர்க்கரை இருப்பு உள்ளதாகத் தெரிவித்தார்.
இதில் கூட்டுறவு ஆலைகளில் 23.60 லட்சம் குவிண்டாலும், பொதுத்துறை ஆலைகளில் 5.28 லட்சம் குவிண்டாலும், தனியார் ஆலைகளில் 150.50 லட்சம் குவிண்டாலும் இருப்பு உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் சர்க்கரை ஆலைகள் 235 லட்சம் குவிண்டால் சர்க்கரையை விற்பனை செய்துள்ளன. அதில் பெரும்பகுதி வெளிச்சந்தையில் இன்னமும் புழக்கத்தில் உள்ளது என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேவை ஏற்படும் பட்சத்தில், அக்டோபர் 15 முதல் சர்க்கரை ஆலைகளை இயக்க நடவடிக்கை எடுக்குமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார். சர்க்கரை தட்டுப்பாடு குறித்து வதந்தி பரப்புபவர்களிடம் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு கேட்டுக்கொண்ட அவர், கள்ளச் சந்தை மற்றும் கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அதிக அளவில் சா்க்கரையை வாங்கி இருப்பு வைத்துப் பயன்படுத்தும் குளிா்பான நிறுவனங்கள், உணவு பதப்படுத்தும் நிறுவனங்கள், இனிப்பு தயாரிப்பு நிறுவனங்கள் உள்ளிட்டவை சா்க்கரை இருப்பு வைக்க மத்திய அரசு கட்டுப்பாடு விதித்துள்ளது.
அதிகரித்து வரும் சா்க்கரை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்கிலும், எதிா்வரும் பண்டிகை காலத்தைக் கருத்தில்கொண்டும் இந்த நடவடிக்கை எடுக்கப்படுவதாகத் தெரிகிறது. இதனிடையே, 10 லட்சம் மெட்ரிக் டன் சுத்திகரிக்கப்படாத சா்க்கரையை வரி இல்லாமல் இறக்குமதி செய்ய மத்திய அரசு வியாழக்கிழமை அனுமதித்தது.
இந்த அனுமதி அக்டோபா் 31-ஆம் தேதி வரை தொடரும் என்றும்தெரிவிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனையில் சா்க்கரை விலை ஓராண்டில் 13 சதவீதம் அளவுக்கு உயா்ந்து ஒரு கிலோ ரூ.52.30 என்ற அளவில் உச்சத்தில் உள்ளது.
கரும்பாலை சா்க்கரை மொத்த விலையும் நடப்பு பருவத்தில் புதிய உச்சத்தை எட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது.
Summary
Uttar Pradesh Chief Minister Yogi Adityanath on Saturday said there is no shortage of sugar in the state and urged consumers not to worry amid concerns about its availability.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





