தொடர் ஓட்டப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற வித்யா ராம்ராஜுக்கு ரூ. 75 லட்சம்: முதல்வர் விஜய்யூடியூபர் சவுக்கு சங்கருக்கு 3 ஆண்டுகள் சிறை: எழும்பூர் நீதிமன்றம்தமிழகத்தில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் இடமாற்றம்!மேற்கு வங்கத்தை பாஜகவுக்கு பரிசளித்த ஞானேஷ் குமாருக்கு பாரத ரத்னா வழங்க வேண்டும்: ஒமர் அப்துல்லாமுதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

1947-ல் மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது! - உ.பி. முதல்வர் பேச்சு!

1947 ஆம் ஆண்டு மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் பேச்சு...

UP CM Adityanath

பிரதமா் நரேந்திர மோடி, உ.பி. முதல்வா் யோகி ஆதித்யநாத். - கோப்புப் படம்

Published On :

இந்தியா சுதந்திரம் பெற்றபோது நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது என உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறியுள்ளார்.

இந்தியா மற்றும் பாகிஸ்தான் பிரிவிணையின்போது ஏற்பட்ட வன்முறைகளை நினைவுகூர்ந்து லக்னௌ நகரத்தில் இன்று (ஆக. 14) நடைபெற்ற நிகழ்ச்சியில், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்துகொண்டார்.

இந்த நிகழ்ச்சியில் பேசிய யோகி ஆதித்யநாத், இந்தியாவின் பிரிவிணைக்கு காங்கிரஸ்தான் காரணம் எனவும், 1947 ஆம் ஆண்டு மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் ஏற்பட்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி, அவர் கூறியதாவது:

“இந்தியா சுதந்திரம் பெற்ற காலத்தில், நரேந்திர மோடி பிரதமராக இருந்திருந்தால் எந்தவொரு பாதிப்பும் இந்தியாவுக்கு ஏற்பட்டிருக்காது. சர்தார் வல்லபாய் படேல் போன்ற ஒருவர் அந்தக் காலத்தில் பிரதமராக இருந்திருந்தால் யாராலும் இந்தியாவை பிரித்திருக்க முடியாது.

காங்கிரஸ் உறுப்பினர்களின் கோழைத்தனமான செயலுக்கு நாடு விலைக்கொடுக்க நேரிட்டது. இந்தக் குணங்களை குடியுரிமைத் திருத்தச் சட்டம் (சிஏஏ) போராட்டங்களின்போது நீங்கள் கண்டிருப்பீர்கள்” எனக் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து, 1947-ல் பாகிஸ்தான் கேட்காத பகுதிகளும் அவர்களுக்கு வழங்கப்பட்டது எனவும், இந்துக்கள் மற்றும் சிந்தி மக்கள் அதிகம் வசிக்கும் சிந்து மாகாணம் மற்றும் பஞ்சாபி மக்கள் அதிகம் வசிக்கும் பஞ்சாப் மாகாணம் ஆகியவை பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டது எனவும் யோகி ஆதித்யநாத் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Summary

Yogi Adityanath has stated that no adverse consequences would have occurred had Modi been the PM when India gained independence.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.