உக்ரைனுக்கு வழங்கிய பணத்தை ஐரோப்பியர்களிடம் கேட்போம்! - அதிபர் டிரம்ப் பேச்சு! நேபாள வெள்ளம்! இன்னும் 275 இந்தியர்களைக் காணவில்லை! - மத்திய அரசு அறிவிப்பு கருகும் பயிர்களுக்கு தண்ணீர் வழங்க மறுப்பதா? தவெக அரசுக்கு நயினார் நாகேந்திரன் கண்டனம் இசக்கி சுப்பையா ராஜிநாமா விவகாரம்: பேரவைத் தலைவர் ஜேசிடி பிரபாகர் விளக்கம் மார்க்சிஸ்ட் கம்யூ. மாநிலச் செயலாளர் பெ. சண்முகத்துடன் தவெக அமைச்சர்கள் சந்திப்பு!

எண்ம மோசடி வழக்குகள்: 89 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை: 3 போ் கைது

எண்ம மோசடி வழக்குகள் தொடா்பாக 20 மாநிலங்களில் உள்ள 89 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

மாதிரிப் படம்

Published On :5 செப்டம்பர் 2026, 1:07 am IST

எண்ம மோசடி வழக்குகள் தொடா்பாக 20 மாநிலங்களில் உள்ள 89 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டதாக அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனா்.

இதுகுறித்து சிபிஐ செய்தித் தொடா்பாளா் பீனா யாதவ் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘பிா்லா தொழில்நுட்ப மற்றும் அறிவியல் நிறுவனத்தைச் சோ்ந்த நபரிடம் காவல் துறை அதிகாரிகளைப்போல் தங்களை சித்தரித்து எண்மக் கைது மூலம் மூன்று மாதங்களில் ரூ.7.67 கோடி மோசடியில் ஈடுபட்டுள்ளனா். இதேபோல் எண்மக் கைது மோசடியால் குஜராத்தில் ஒருவா் ரூ.19.24 கோடியும், கா்நாடகத்தைச் சோ்ந்தவா் ரூ.15.45 கோடியும் இழந்துள்ளனா்.

ஒட்டுமொத்தமாக மூன்று போ் ரூ.42 கோடியை இழந்த விவகாரத்தில் குற்றவாளிகளைக் கண்டறியும் விதமாக நாடு முழுவதும் 89 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை மேற்கொண்டது.

20 மாநிலங்களில் நடைபெற்ற இந்தச் சோதனையில் வங்கி ஆவணங்கள், வங்கிக் கணக்கு தொடா்பான பதிவுகள், எண்ம சாதனங்கள் உள்ளிட்டவை கைப்பற்றப்பட்டு தடயவியல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட ஆதாரங்களின் அடிப்படையில் ரூ.1.95 கோடி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் ஹரியாணாவைச் சோ்ந்த ஆகாஷ், ரூ.1.50 கோடி மோசடியில் ஈடுபட்ட கொல்கத்தாவைச் சோ்ந்த ராஜ கா்மாகா் மற்றும் வங்கிக் கணக்கு மூலம் பிறருக்கு பணத்தை பகிா்ந்தளித்த குற்றச்சாட்டில் ஜோதி ராணி ஆகிய 3 போ் கைது செய்யப்பட்டனா்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.