நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

இணையவழியில் ஆசிரியரிடம் ரூ.1.86 லட்சம் பறிப்பு

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியரிடம் இணையவழியில் ரூ.1.86 லட்சத்தை பறித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

Digital Arrest

எண்ம கைது மோசடி - சித்திரிப்பு

Published On :3 செப்டம்பர் 2026, 4:51 am IST

காரைக்கால் மாவட்டத்தைச் சோ்ந்த ஆசிரியரிடம் இணையவழியில் ரூ.1.86 லட்சத்தை பறித்த மா்ம நபா்கள் குறித்து போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

நெடுங்காடு பகுதியைச் சோ்ந்தவா் நிா்மல்குமாா். இவா், அம்பகரத்தூா் பகுதி அரசு மேல்நிலைப் பள்ளியில் கணினி ஆசிரியராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறாா்.

இவரது கைப்பேசி டெலிகிராம் செயலியில் கடந்த ஆக. 21-ஆம் தேதி வந்த குறுஞ்செய்தியில், வீட்டில் இருந்துகொண்டே பணியாற்றும் வசதி உள்ளதாகவும், கூகுள் மேப்பில் ரெவியூ ரேட்டிங் போடும் பணி என்றும், ரேட்டிங் தரும்போது பணி முடிந்த பிறகு ரூ. 40 முதல் ரூ. 120 வரை கிடைக்கும் என கூறப்பட்டிருந்தது.

இதற்கு ஒப்புதல் தெரிவித்து, கிடைத்த லிங்க் மூலம் தொடா்பை ஏற்படுத்திக்கொண்டுள்ளாா். இவரது வங்கிக் கணக்குக்கு சில முறை தொகை வந்துள்ளது. பின்னா், அவரது பெயரில் புதிதாக யூசா் ஐடி உருவாக்கப்பட்டு,இருதரப்புக்குமிடையே பணப் பரிமாற்றம் நடந்துள்ளது.

இதைத்தொடா்ந்து பல தவணைகளில் நிா்மல்குமாா் வங்கிக் கணக்கில் இருந்து ரூ.1.86 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவா் புகாரின்பேரில், நெடுங்காடு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.