கிரேக்கத்தில் வான் சாகச நிகழ்வில் ஜெட் விமானம் விபத்து! விநாயகர் சிலை- வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடுநவ. 1-க்குள் கடைகளுக்கு தமிழில் பெயர்ப் பலகை: உயர்நீதிமன்றம் உத்தரவுமீனாட்சியம்மன் கோயில் குடமுழுக்கு: உள்ளூர் விடுமுறை குறித்து விரைவில் அறிவிப்பு - அமைச்சர் தகவல் நேபாள வெள்ளம்: கயிற்றுப் பாலம் கட்டும் ராணுவம்! மீட்புப் பணியில் 20 ஹெலிகாப்டர்கள்! லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை பழிவாங்கும் நடவடிக்கைதான்: கே.என். நேரு காங்கிரஸ் முன்னாள் எம்எல்ஏ 3 ஆண்டுகள் தேர்தலில் போட்டியிடத் தடை!எதிர்திசையில் வாகனம் ஓட்டுபவரா? திறந்தது மூன்றாம் கண்! டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டத்துக்குக் காரணம் திமுக - அதிமுகதான்: அமைச்சர் விக்னேஷ் பேச்சு

கர்நாடகம்: போலீஸாரிடமிருந்து தப்பிக்க குளத்தில் பதுங்கிய குற்றவாளி!

கர்நாடகத்தில் குளத்தில் பதுங்கிய குற்றப் பின்னணி கொண்ட இளைஞரை மடக்கிப் பிடித்த போலீஸ் பற்றி....

Karnataka Man Hid In Pond To Dodge Cops

கர்நாடகம். - Photo grab X video.

Published On :28 வினாடிகள் முன்பு

கர்நாடகத்தில் குளத்தில் பதுங்கிய குற்றப் பின்னணி கொண்ட இளைஞரை போலீஸார் மடக்கிப் பிடித்தனர்.

கர்நாடக மாநிலம், பத்ராவதியைச் சேர்ந்த இளைஞர் திலீப் (என்ற) கரியா (19). இவர் மீது இரண்டு கொலை முயற்சி வழக்குகள் உட்பட மொத்தம் 16 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

நீதிமன்றத்தில் ஆஜராகாததால், திலீப்புக்கு எதிராக மூன்று முறை பிணையில் வர முடியாத கைது வாரண்ட் பிறப்பிக்கப்பட்டது.

ஆனால் ஒவ்வொரு முறையும் அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமல், போலீஸாரின் பிடியில் இருந்து தப்பித்து வந்தார். இந்த நிலையில் பத்ராவதி நியூ டவுன் போலீஸார், அவரைப் பிடிக்க தீவிர நடவடிக்கை மேற்கொண்டனர்.

போலீஸ் தன்னை நெருங்கியதை அறிந்த திலீப், கைது நடவடிக்கையிலிருந்து தப்பிக்க அருகில் இருந்த தண்ணீர் குளத்திற்குள் குதித்து ஒளிந்துகொள்ள முயன்றார்.

இருப்பினும், காவல் உதவி ஆய்வாளர் ரமேஷ் மற்றும் காவலர் பிரசன்னா ஆகிய இருவரும் உடனடியாக குளத்து நீரில் குதித்து அவரைப் மடக்கிப் பிடித்தனர்.

தற்போது அவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளார்.

Summary

A man with a criminal record who had spent a long time dodging the courts thought a pond in Karnataka's Shivamogga district would be his hiding place. Police had other plans.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.