சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

தில்லியில் மாணவர் விடுதி இடிந்து விபத்து! 15-க்கும் மேற்பட்டோர் சிக்கியிருக்க வாய்ப்பு?

தில்லியில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி இடிந்து விபத்துக்குள்ளானது குறித்து...

Building collapses near Delhi's Satya Niketan, several students trapped
Published On :6 செப்டம்பர் 2026, 4:55 pm IST

தில்லியில் மாணவர்கள் தங்கியிருந்த விடுதி இடிந்து விபத்துக்குள்ளானது.

தெற்கு தில்லியின் சத்யா நிகேதன் பகுதியில் கல்வி நிறுவனங்கள் அதிகமிருப்பதால், இந்தப் பகுதியில் மாணவர் விடுதிகளும் செயல்பட்டு வந்துள்ளன.

இந்த நிலையில், நானக்புரா குருத்வாரா அருகே செயல்பட்டு வந்த மாணவர் விடுதி இன்று (செப். 6) மதியம் 1.30 மணியளவில் இடிந்து விபத்துக்குள்ளானது. இடிந்து விழுந்த கட்டடம் பழைமையான கட்டடம் எனத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனைத் தொடர்ந்து, உடனடியாக காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த விபத்தில் இடிபாடுகளுக்குள் எத்தனை பேர் சிக்கியுள்ளனர் என்பது குறித்து உறுதியான தகவல் வெளிவரவில்லை.

Story image

இதனிடையே, 12 தீயணைப்பு வாகனங்களும் வரவழைக்கப்பட்டு, அப்பகுதியினரும் மீட்புப் பணியில் ஈடுபட்டு வரும்நிலையில், இதுவரையில் 3 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட மூவரும் பலத்த காயமடைந்திருப்பதால், அவர்களும் மூவரும் சிகிச்சைக்காக உடனடியாக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர்.

மேலும், வேலைநாள்களில் இந்த விபத்து நிலைமை இன்னும் மோசமானதாக ஆகியிருக்கும் என அப்பகுதியினர் கூறுகின்றனர். ஏனெனில், வார இறுதி என்பதால் விடுதியில் இருந்த சில மாணவர்கள் தங்களின் ஊர்களுக்குச் சென்றதாகவும் தெரிவித்தனர்.

Summary

Building collapses near Delhi's Satya Niketan, several students trapped

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.