சொந்தத் தோல்விகளை மறைக்க எதிர்க்கட்சிகளுக்கு அடைமொழி: மோடியை விமர்சித்த கார்கே! தவெக தலைமையிலான கூட்டணி பெயர் என்ன? செப். 9-ல் அறிவிப்பு சட்டப்பேரவையில் முதல்வர் நாளை என்ன பேசவிருக்கிறார்? பேரவையில் பஞ்ச் டயலாக் பேசுவதற்காக முதல்வருக்கு 3 நாள்களா? அதிமுக விமர்சனம் பிரிக்ஸ் மாநாடு: செப்டம்பர் 11இல் தில்லியில் பள்ளிகளுக்கு விடுமுறை! குளறுபடிகளுக்கு இடம் தராமல் சாதிவாரி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின்

உ.பி.: படிக்கட்டில் அமர்வது தொடர்பான தகராறில், ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிடப்பட்ட இளைஞர் பலி

உத்தர பிரதேசத்தில் ரயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பான தகராறில் இளைஞர் பலியானது பற்றி....

UP: Man dies after being pushed from moving train over footrest dispute

கோப்புப்படம்.

Published On :6 செப்டம்பர் 2026, 3:34 pm IST

உத்தர பிரதேசத்தில் ரயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பான தகராறில், ஓடும் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்டதில் இளைஞர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேச மாநிலம், ரயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பான தகராறைத் தொடர்ந்து, ராயா ரயில் நிலையத்திற்கு அருகே ஓடும் பயணிகள் ரயிலிலிருந்து தள்ளிவிடப்பட்ட 22 வயது இளைஞர் பலியானதாக ரயில்வே போலீஸார் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

ஹத்ராஸ் மாவட்டத்தைச் சேர்ந்த ஜதின், ஹத்ராஸ் நிலையத்திலிருந்து கஸ்கஞ்ச்-மதுரா பயணிகள் ரயிலில் தனது குடும்பத்தினருடன் பயணம் செய்தபோது இந்தச் சம்பவம் சனிக்கிழமை நிகழ்ந்ததாக ரயில்வே போலீஸ் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில், ராயா நிலையத்தைக் கடந்து சென்றுகொண்டிருந்தபோது, ​​ரயிலின் படிக்கட்டில் அமர்வது தொடர்பாக ஜதினுக்கும் கஜேந்திராவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அந்த வாக்குவாதத்தில் ஜதினைக் கொலை செய்யும் நோக்கில் கஜேந்திரா அவரை ஓடும் ரயிலில் இருந்து தள்ளிவிட்டுள்ளார்.

இதில் கீழே விழுந்து பலத்த காயமடைந்த ஜதின் பலியானார். இந்த சம்பவத்தில் வழக்குப்பதிவு செய்து கஜேந்திராவை ரயில்வே போலீஸார் கைது செய்தனர். ஜதின் உடல் கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர்.

Summary

A 22-year-old man died after being allegedly pushed from a moving passenger train near Raya railway station following a dispute over sitting on its footrest, the Government Railway Police (GRP) said on Sunday.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.