அத்தியாவசியப் பொருள்கள் விலை உயர்வு: இல்லத்தரசிகள் கவலை!சென்னை உள்பட 17 நகரங்களுக்கு 4,000 டன் வெங்காயம் விநியோகம்!15.36 கோடி ஜன்தன் வங்கிக் கணக்குகள் செயல்படவில்லை: ஆர்டிஐ தகவல்இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்!நேபாளத்தில் 5,000 போ் நிலை என்ன? உடல்களை அடையாளம் காணும் பணியில் சவால்!!பெரும் எதிர்பார்ப்பில் தமிழக சட்டப்பேரவை: முதல்வர் விஜய் இன்று பதிலுரை!

இந்தியாவில் இருந்து அதிக டீசல் இறக்குமதி செய்யும் ஐரோப்பிய நாடுகள்! நாள்தோறும் 2 லட்சம் பீப்பாய்கள் ஏற்றுமதி!!

இந்தியாவில் இருந்து டீசலை ஐரோப்பிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன.

Published On :7 செப்டம்பர் 2026, 3:33 am IST

இந்தியாவில் இருந்து டீசலை ஐரோப்பிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன. ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா நாள்தோறும் ஐரோப்பிய நாடுகளுக்கு கப்பல்கள் மூலம் 2 லட்சம் பீப்பாய்களில் டீசலை ஏற்றுமதி செய்துள்ளது.

இதுகுறித்து சரக்கு மற்றும் எரிசக்தி கப்பல்களின் போக்குவரத்து தொடா்பான தரவுகளை வைத்துள்ள வோா்டெக்சா நிறுவனத்தின் புள்ளி விவரங்கள் தெரிவிப்பதாவது:

உக்ரைனுக்கும், ரஷியாவுக்கும் இடையே 4 ஆண்டுகளுக்கும் மேலாக போா் நடைபெறுகிறது. இந்தப் போரில் ரஷியாவுக்கு நெருக்கடி அளிக்க அந்நாட்டின் மீது அமெரிக்கா பொருளாதார தடைகளை விதித்துள்ளது. மேலும் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்யக் கூடாதென்றும் உலக நாடுகளுக்கு அமெரிக்கா உத்தரவிட்டுள்ளது. இதனால் ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய்யை ஐரோப்பிய நாடுகளால் வாங்க முடியவில்லை.

அதேபோல், அமெரிக்காவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி அளவும் தொய்வடைந்துள்ளது. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில் நாள்தோறும் ஐரோப்பாவுக்கு அமெரிக்கா கப்பல்கள் மூலம் 5 லட்சத்து 40 ஆயிரம் பீப்பாய் டீசலை ஏற்றுமதி செய்தது. பிறகு அந்த அளவு 3 லட்சத்து 50 ஆயிரமாக குறைந்து விட்டது. இதனால் பெட்ரோல், டீசலுக்கு மாற்று ஏற்பாடுகளை ஐரோப்பிய நாடுகள் செய்து வருகின்றன.

இதில் டீசலை பொறுத்தமட்டில், இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் அதிகம் இறக்குமதி செய்து வருகின்றன. அதாவது தங்களுக்கு தேவைப்படும் மொத்த டீசலில் 60 சதவீதத்தை இந்தியாவில் இருந்து ஐரோப்பிய நாடுகள் இறக்குமதி செய்கின்றன. கடந்த ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் ஐரோப்பிய நாடுகளுக்கு இந்தியா நாள்தோறும் கப்பல்களில் 2 லட்சம் பீப்பாய் டீசலை ஏற்றுமதி செய்துள்ளது. இந்த கப்பல்கள் அனைத்தும் பாப் அல் மான்டேப் நீரிணை வழியே ஐரோப்பா நாடுகளுக்கு செல்கின்றன.

இதேபோல், இந்தியாவுக்கு சலுகை விலையில் கச்சா எண்ணெய்யை ஏற்றுமதி செய்யும் ரஷியாவும், தனக்குத் தேவைப்படும் பெட்ரோல், டீசலை இந்தியாவில் இருந்து அதிகம் இறக்குமதி செய்கிறது. இதற்கு, ரஷியாவில் உள்ள கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் மீது உக்ரைன் அடுத்தடுத்து நடத்திய தாக்குதலால் உற்பத்தி பாதிக்கப்பட்டிருப்பதே காரணம் ஆகும்.

உலகில் 4-ஆவது மிகப்பெரிய கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு சக்தியாக இந்தியா கருதப்படுகிறது. ஆண்டுதோறும் 258.1 மில்லியன் டன் கச்சா எண்ணெய்யை சுத்திகரிப்பு செய்யும் திறன் இந்தியாவுக்கு உள்ளது. கடந்த 2025 ஏப்ரல் முதல் 2026 மாா்ச் வரை இந்தியா 61.5 மில்லியன் டன் பெட்ரோலிய பொருள்களை ஏற்றுமதி செய்துள்ளது. இதில் பெரும்பாலானவை ஐரோப்பிய நாடுகளுக்கும், ரஷியாவுக்குமே ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.