
கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலி; நியாயமான விசாரணை வேண்டும்: ராகுல் காந்தி
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலியான விவகாரத்தில் நியாயமான விசாரணை வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளது குறித்து...

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி - கோப்புப்படம்
மத்தியப் பிரதேசத்தில் கள்ளச்சாராயம் குடித்து 15 பேர் பலியான விவகாரத்தில் நியாயமான விசாரணை வேண்டும் என காங்கிரஸ் தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி செவ்வாய்க்கிழமை (செப். 8) வலியுறுத்தியுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தின் சாகர் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை, 15 பேர் பலியாகினர். முதற்கட்ட விசாரணையில் நச்சுத் தன்மை வாய்ந்த மெத்தில் ஆல்கஹால் சாராயத்தில் கலந்திருந்தது தெரிய வந்துள்ளது.
இதுகுறித்து ராகுல் காந்தி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது:
சாகர் பகுதியில் விஷம் கலந்த கள்ளச்சாராயம் ஏராளமானோரின் உயிரைப் பறித்து, எண்ணற்ற குடும்பங்களை துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. ஆனால், அடுத்து என்ன நடக்கும் என்பது மத்தியப் பிரதேசத்தில் உள்ள அனைவருக்கும் தெரியும். சிலர் கைது செய்யப்படுவார்கள், சில அதிகாரிகள் இடைநீக்கம் செய்யப்படுவார்கள், மேலும் ஒரு விசாரணைக்கு உத்தரவிடப்படும். ஏனெனில் இது முதல் முறையல்ல.
சற்று நேரத்திற்கு முன்பு, இந்தூரில் அசுத்தமான நீரினால் பலர் உயிரிழந்தனர். கடந்த ஆண்டு, நச்சுத்தன்மையுள்ள இருமல் மருந்து எண்ணற்ற சிறு குழந்தைகளின் உயிரைப் பறித்தது.
மருந்து விஷமானது. மது விஷமானது. தண்ணீர் விஷமானது. புதிய சட்டங்கள் இயற்றப்படுகின்றன, ஆனால் அடுத்த துயரம் நிகழும் வரை முடக்கி வைக்கப்படுகின்றன.
மத்தியப் பிரதேசத்தில் 20 ஆண்டுகளுக்கும் மேலாக பாஜக அரசு ஆட்சி செய்து வருகிறது. இதுபோன்ற சம்பவங்களைத் தடுப்பதற்கு எந்த நடவடிக்கையும் இல்லை. அதன் பிறகு, பெயரளவிலான நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்படுகின்றன. இதற்கெல்லாம் யார் பொறுப்பு?
ஒரு நியாயமான விசாரணையின் மூலம் இந்த மரணங்களுக்குக் காரணமான முழு உண்மையும் வெளிவர வேண்டும். மேலும், இந்த நடவடிக்கை அடிமட்ட ஊழியர்களுடன் மட்டும் நின்றுவிடாமல், உண்மையான குற்றவாளிகள் பொறுப்பேற்க வேண்டும் என்று ராகுல் காந்தி குறிப்பிட்டுள்ளார்.
à¤à¤¾à¤°à¤¤ à¤à¥ सबसॠà¤à¥à¤°à¤·à¥à¤ सरà¤à¤¾à¤° वालॠराà¤à¥à¤¯ मधà¥à¤¯à¤ªà¥à¤°à¤¦à¥à¤¶ मà¥à¤ शासन नाम à¤à¥ à¤à¥à¤ à¤à¥à¤à¤¼ बà¤à¥ हॠनहà¥à¤à¥¤
— Rahul Gandhi (@RahulGandhi) September 8, 2026
à¤à¤¹à¤°à¥à¤²à¥ शराब नॠपà¥à¤°à¤¦à¥à¤¶ à¤à¥ साà¤à¤° मà¥à¤ à¤à¤¨à¥à¤ लà¥à¤à¥à¤ à¤à¥ à¤à¤¾à¤¨ लà¥à¤à¤° à¤à¤¨ सà¤à¥ à¤à¤°à¥à¤ मà¥à¤ मातम पहà¥à¤à¤à¤¾ दिया हà¥à¥¤ मà¤à¤° पà¥à¤°à¥ मधà¥à¤¯à¤ªà¥à¤°à¤¦à¥à¤¶ à¤à¥ पता हॠà¤à¤à¥ à¤à¥à¤¯à¤¾ हà¥à¤à¤¾ - à¤à¥à¤ à¤à¤¿à¤°à¤«à¥à¤¤à¤¾à¤°à¤¿à¤¯à¤¾à¤ हà¥à¤à¤à¥, à¤à¥à¤ à¤à¤§à¤¿à¤à¤¾à¤°à¥ ससà¥à¤ªà¥à¤à¤¡ हà¥à¤à¤à¥,⦠https://t.co/Hy3ZuT3jEM
Summary
Congress leader and Leader of the Opposition in the Lok Sabha Rahul Gandhi demanded a fair investigation on Tuesday (Sept. 8) into the incident where 15 people died after consuming illicit liquor in Madhya Pradesh.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






