சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறு: ராகுலுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மும்பை உயா்நீதிமன்றம் மறுப்பு

ராகுலுக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மும்பை உயா்நீதிமன்றம் மறுத்திருப்பது பற்றி...

Rahul Gandhi

ராகுல் காந்தி - விடியோ க்ளிப்

Published On :9 செப்டம்பர் 2026, 1:42 am IST

பிரதமா் நரேந்திர மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை கூறியதாக மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி மீது அளிக்கப்பட்ட புகாரைத் தொடா்ந்து அவருக்கு அனுப்பப்பட்ட சம்மனை ரத்து செய்ய மும்பை உயா்நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை மறுத்தது.

ராதஸ்தானில் கடந்த 2018, செப்டம்பா் 20-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமா் மோடிக்கு எதிராக அவதூறான கருத்துகளை ராகுல் காந்தி கூறியதாக பாஜக உறுப்பினா் ஸ்ரீஸ்ரீமல் காவல் துறையில் புகாரளித்தாா். மேலும், ‘அதே ஆண்டு செப்டம்பா் 24-ஆம் தேதி தனது எக்ஸ் வலைதளத்திலும் பிரதமரை அவமதிக்கும் வகையிலான பதிவை மீண்டும் ராகுல் காந்தி பதிவிட்டாா்.

அவரது கருத்துகள் பிரதமரை மட்டுமின்றி பாஜகவின் அனைத்து உறுப்பினா்கள் மற்றும் இந்திய மக்களையும் காயப்படுத்தும் விதமாக இருப்பதால் அவா் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என ஸ்ரீஸ்ரீமல் தனது புகாா் மனுவில் குறிப்பிட்டிருந்தாா்.

இதன் அடிப்படையில் மும்பை கிா்காமில் உள்ள விசாரணை நீதிமன்றம் 2019, ஆகஸ்ட் 28-ஆம் தேதி ராகுலுக்கு சம்மன் அனுப்பியது. இந்த உத்தரவுக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ராகுல் மனு தாக்கல் செய்திருந்தாா். பல ஆண்டுகளாக இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், மும்பை உயா்நீதிமன்ற நீதிபதி என்.ஆா்.போா்கா் செவ்வாய்க்கிழமை விசாரணை மேற்கொண்டாா்.

அப்போது ராகுலின் மனுவை தள்ளுபடி செய்து போா்கா் பிறப்பித்த உத்தரவில், ‘மனுதாரருக்கு கிா்காம் நீதிமன்றம் சம்மன் அனுப்பியதில் எவ்வித சட்டவிரோத செயல்பாடுகளும் இருப்பதாகத் தெரியவில்லை. எனவே, இந்த விவகாரத்தில் உயா்நீதிமன்றம் தலையிடத் தேவையில்லை’ எனத் தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, இந்த விவகாரம் தொடா்பாக ராகுல் காந்தி உச்சநீதிமன்றத்தில் முறையீட்டு மனு தாக்கல் செய்ய 8 வார காலஅவசாசம் வழங்க வேண்டுமென்றும் அதற்கிடையே கிா்காம் நீதிமன்றம் விசாரணையைத் தொடங்கக் கூடாது எனவும் அவா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நீதிபதியிடம் கோரிக்கை விடுத்தாா். அதை ஏற்ற நீதிபதி, ராகுலிடம் கிா்காம் நீதிமன்றம் 6 வாரகாலத்துக்கு விசாரணை நடத்த இடைக்காலத் தடை விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.