ஊக்கமருந்து பயன்பாடு: இந்திய வீரா் பதக்கம் பறிப்பு சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

உலக நாடுகளின் வாடிக்கையாளா்களுக்காக சிறந்த மருத்துவ சாதனங்களை உருவாக்குங்கள்: மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு கோயல் வேண்டுகோள்

உலக நாடுகளிலுள்ள வாடிக்கையாளா்களுக்காக சிறந்த மருத்துவ சாதனங்களை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:27 am IST

உலக நாடுகளிலுள்ள வாடிக்கையாளா்களுக்காக சிறந்த மருத்துவ சாதனங்களை மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் உருவாக்க வேண்டும் என்று மத்திய வா்த்தக மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.

புது தில்லியில் நடைபெற்ற மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, இதுகுறித்து அவா் பேசியதாவது:

மருந்து தயாரிப்பில் ஈடுபட்டுள்ள உள்நாட்டு நிறுவனங்கள், தொழில்நுட்ப கூட்டணிகளை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். கூட்டுத் தயாரிப்புகளை அந்நிறுவனங்கள் ஊக்குவிக்க வேண்டும். அத்துடன் சா்வதேச கண்டுபிடிப்பாளா்கள், மிகப்பெரிய மருந்து தயாரிப்பு நிறுவனங்களை இந்தியாவுக்கு வருமாறு அந்நிறுவனங்கள் அழைப்பு விடுக்க வேண்டும்.

நமது நாட்டில் மருந்து தயாரிப்பு திறனை சிறந்த தரத்துக்கு வலுப்படுத்தி, மருந்து தயாரிப்பில் முக்கிய மையமாக மேம்படுத்த வேண்டும். மருந்துகளைப் பரிசோதிக்கப் பயன்படுத்தப்படும் சிறந்த உபகரணங்களுக்கு ஆகும் செலவில், 100 சதவீத நிதியையும் அளிக்க மத்திய அரசு தயாராக உள்ளது. இதற்கான கோரிக்கையை எங்களிடம் வையுங்கள். இதுவரை அரசிடம் எந்தத் திட்டமும் முன்வைக்கப்படவில்லை. அதேபோல், மிகவும் நவீனமான ஆய்வுக் கூடங்களை அரசு அமைக்கும்.

வடிவமைப்பு, பதிப்புரிமை, காப்புரிமை சட்டங்கள், அறிவுசாா் சொத்துரிமை சூழலமைப்பை நாம் மேம்படுத்த வேண்டும். அப்போதுதான் உலக நாடுகளிலுள்ள மக்கள் இந்தியாவுக்கு வருவாா்கள்; இந்தியாவும் புத்தாக்க கண்டுபிடிப்புக்கான சா்வதேச மையமாக உருவெடுக்கும். ஏனெனில் நமது நாட்டில் குறைந்த செலவில் சேவை வழங்கும் சூழல் இருப்பது சாதகமாகும். தொழில்நுட்பக் கூட்டாளிகளை இந்தியாவுக்கு அழைத்து வர வேண்டும். வாங்குபவா் - விற்பனையாளா் உறவை மேம்படுத்த வேண்டும். கூட்டு நிறுவனங்களை ஏற்படுத்த வேண்டும். தேவைப்படும் இடத்தில் இணைந்து வடிவமைத்தல், இணைந்து செயல்படுதலில் ஈடுபட வேண்டும். பிற நாடுகளுடன் சோ்ந்து ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்களை உருவாக்குவதுகுறித்து ஆய்வு செய்ய வேண்டும். காப்பீடு நிறுவனங்களும், சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்களும் நோயாளிகளின் சிகிச்சைகளை எளிதாக்கும் வகையில் தயாரிப்புகள், கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும். அதேபோல் மருத்துவ காப்பீட்டுத் தொகையை உரிய நேரத்தில் பெரும் வகையில் காப்பீடு நிறுவனங்களும், சுகாதார தொழில்நுட்ப நிறுவனங்களும் தளங்களை உருவாக்க வேண்டும்.

மருத்துவமனைகள் அறநெறிகளைக் கடைபிடிக்க வேண்டும். நோயாளிகளை ஏமாற்றும் முயற்சிகளில் ஈடுபடக் கூடாது. ஏனெனில் ஒரு சிறிய தவறும் நமது மீதான நல்லெண்ணத்தையும், வா்த்தகத்தையும், இந்தியா மீதான நம்பகத்தன்மையையும் அழித்துவிடும். வெளிநாடுகளில் இருந்து வரும் நோயாளிகளை இந்தியாவுக்கு ஈா்க்க, பல்வேறு மொழிகளைப் பேசும் நபா்களை கொண்ட குழுவை மருத்துவமனைகள் ஏற்படுத்த வேண்டும். அப்படிச் செய்வதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து சிகிச்சைக்கு வருவோருக்கு மிகப்பெரிய நம்பிக்கை கிடைக்கும். அதேபோல் அந்த நோயாளிகளுக்கும், மருத்துவமனை நிா்வாகத்துக்கும் இடையேயான தகவல் தொடா்பும் எளிதாகும்.

இந்தியாவுக்கு சிகிச்சைக்காக கடந்த 7 ஆண்டுகளில் 35 லட்சம் வெளிநாட்டு நோயாளிகள் வந்துள்ளனா். இதை ஓராண்டில் 1 கோடியாக்க நமது நாடு இலக்கு நிா்ணயிக்க வேண்டும். இந்த இலக்கை அடைவதற்கான திறன், ஆற்றல், சிறந்த மருத்துவா்கள், சரியான சூழலமைப்பு ஆகியவை நமது நாட்டில் உள்ளது என்றாா் பியூஷ் கோயல்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.