
பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு
பிகாரில் வெள்ள நிலவரம் மோசமடைந்துவரும் நிலையில், பாட்னா உள்பட 14 மாவட்டங்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பிகாரில் வெள்ள நிலவரம் மோசமடைந்துவரும் நிலையில், பாட்னா உள்பட 14 மாவட்டங்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பிகாரில் பலத்த மழையின் காரணமாக கங்கை உள்பட பல்வேறு நதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, தாழ்வான பகுதிகளுக்குள் புகுந்துள்ளது. கண்டக், கோஷி, புத்திகண்டக், புன்புன், பாக்மதி, காக்ரா ஆகிய நதிகளில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதால் பாட்னா, பாகல்பூர், வைஷாலி, சரண், பெகுசராய், ககாரியா, முங்கர் உள்ளிட்ட 14 மாவட்டங்களில் 35 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். பிகாரில் நடப்பு மாதத்தில் இதுவரை 76.6 மி.மீ. மழை கொட்டித் தீர்த்துள்ளது. இது இயல்பைவிட 31 சதவீதம் அதிகமாகும்.
படகு கவிழ்ந்து ஒருவர் உயிரிழப்பு: பாகல்பூர் மாட்டம், காரிக் ரகோபூரில் கால்நடைகளுக்கு தீவனம் வாங்குவதற்காக கங்கை நதியில் படகில் பயணித்தபோது, அதிக நீரோட்டத்தால் படகு கவிழ்ந்தது. படகிலிருந்த 11 பேரில் ஒருவர் உயிரிழந்தார். 9 பேர் மீட்கப்பட்டனர். மேலும் ஒருவரை மாயமாகியுள்ளதாக மாநில பேரிடர் மீட்புப் படை தெரிவித்தது.
ஹிமாசலில் மழை}வெள்ள சேதங்கள்: ஹிமாசல பிரதேசத்தில் நடப்பு பருவமழை காலத்தில் திடீர் வெள்ளம், நிலச்சரிவு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்களில் இதுவரை 114 பேர் உயிரிழந்துள்ளனர். வீடுகள், பிற கட்டடங்கள், சாலைகள், பாலங்கள் என ரூ.1,423 கோடிக்கு சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





