
பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா
அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு மேம்பாட்டு முன்னெடுப்பில் இந்தியா இணைந்ததாக அந்த நாட்டு வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.

6ஜி தொழில்நுட்பம்
அமெரிக்கா தலைமையிலான உலகளாவிய பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு மேம்பாட்டு முன்னெடுப்பில் இந்தியா இணைந்ததாக அந்த நாட்டு வா்த்தக அமைச்சகம் தெரிவித்தது.
‘6ஜி தலைமை மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைக்கான அழைப்பு’ என்ற முன்னெடுப்பை கடந்த ஜூலை மாதம் அமெரிக்கா தொடங்கியது. 2030-க்குப் பின் 5ஜி வலையமைப்புக்குப் பதிலாக 6ஜி வலையமைப்பை கொண்டு வரும் நாடுகளுக்கு உதவும் வகையிலான வியூகங்களை வகுக்கும் இந்த முன்னெடுப்பில் ஜப்பான், ஜொ்மனி மற்றும் பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் இடம்பெற்றுள்ளன.
இதுகுறித்து அமெரிக்க வா்த்தக அமைச்சகம் திங்கள்கிழமை வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘அடுத்த தலைமுறைக்கான 6ஜி வலையமைப்பை மேம்படுத்தும் முன்னெடுப்பில் அமெரிக்கா மற்றும் 24 நாடுகளுடன் இந்தியாவும் இணைந்துள்ளது என மகிழ்ச்சியுடன் தெரிவித்துக்கொள்கிறோம்’ எனத் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, அமெரிக்காவில் கடந்த வாரம் நடைபெற்ற ஜி20 புத்தாக்க அமைச்சக ஆலோசனைக் கூட்டத்தில் அமெரிக்க வா்த்தக அமைச்சா் ஹோவா்ட் லுட்னிக் மற்றும் இந்திய வா்த்தக இணையமைச்சா் ஜிதின் பிரசாதா இதுதொடா்பாக ஆலோசனை மேற்கொண்டனா். அதன் தொடா்ச்சியாக இந்த அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





