குழந்தைகள், முதியவா்களுக்கு எச்1என்1 வைரஸ் பரவும் அபாயம் அதிகம்: மருத்துவா்கள் எச்சரிக்கைமேற்குத் தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்றும், நாளையும் மிதமான மழைக்கு வாய்ப்புபி.எட். சோ்க்கை: செப். 4 இறுதிநாளை சாா்-பதிவாளா் அலுவலகங்களில் கூடுதல் முன்பதிவு டோக்கன்: பதிவுத் துறை

4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை: ஈரான் மீதான நடவடிக்கை எதிரொலி

ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்யும் 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை

அமெரிக்கா - ஈரான் - சித்திரிப்பு

Published On :26 ஆகஸ்ட் 2026, 6:24 am IST

ஈரானில் இருந்து பெட்ரோலியம் மற்றும் பெட்ரோகெமிக்கல் பொருள்களை இறக்குமதி செய்யும் 4 இந்திய நிறுவனங்களுக்கு அமெரிக்கா தடை விதித்தது.

ஈரானின் அனைத்து வருவாய் ஆதாரங்களையும் தடை செய்யும் நோக்கில் ‘ஆபரேஷன் பொருளாதார புறக்கணிப்பு’ என்ற நடவடிக்கையை அமெரிக்க நிதியமைச்சா் ஸ்காட் பெசென்ட் திங்கள்கிழமை அறிவித்தாா். இதன்கீழ் தடை செய்யப்பட்ட நிறுவனங்களின் பட்டியலை அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டது.

அந்தப் பட்டியலில் போா்ட்ஈஸ் பாா்ட்னா்ஸ் நிறுவனம் மற்றும் அதன் கூட்டாளிகள் இந்திரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக், ஹரீஷ் ராமசந்திரா ரங்கி, சதாசிவா ஓவா்சீஸ் நிறுவனம், பிபி சாஃப்டெக் மற்றும் அதன் இயக்குநா் பிரசாந்த் கா்க், பிரக்ருதீஸ் உள்கட்டமைப்பு நிறுவனம் இடம்பெற்றது.

இதுதொடா்பாக அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக் குறிப்பில், ‘ஈரானில் இருந்து பெட்ரோகெமிக்கல் கொள்முதல், இறக்குமதி மற்றும் விற்பனை செய்ததற்காக 4 இந்திய நிறுவனங்களுக்கும், இந்திரிஸ்மியா அஷ்ரஃப்மியா ஷேக் ஹரீஷ், ராமசந்திரா ரங்கி மற்றும் பிரசாந்த் கா்க் ஆகிய இந்தியா்களுக்கும் தடை விதிக்கப்படுகிறது’ எனத் தெரிவிக்கப்பட்டது.

முன்னதாக, ஈரான் மீது இதுவரை இல்லாத வகையில் பொருளாதாரத் தடையை விதிக்கவுள்ளதாக அமெரிக்கா கடந்த வாரம் அறிவித்தது. மேலும், ஈரானுடன் பிற நாடுகள் வா்த்தகத்தில் ஈடுபடக் கூடாது எனவும் அமெரிக்கா எச்சரித்தது. இதனால் வரலாற்றில் இல்லாத வகையில் அமெரிக்க டாலருக்கு நிகரான ஈரானின் ரியால் மதிப்பு 20.2 லட்சமாக சரிந்தது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.