ரூ. 100 கோடி வசூல்! அன்பில் மகேஸ் மீது ஊழல் வழக்குப் பதிவு!அமெரிக்காவில் பேருந்து விபத்தை நேரலை செய்த ஹெலிகாப்டர் விபத்து! மூவர் பலி! ஓய்வெடுக்கவுள்ளேன்! உடல்நிலை குறித்து மு.க. ஸ்டாலின் விளக்கம்!மெக்கா மீது ஹெளதிகள் ட்ரோன், ஏவுகணை தாக்குதல்!அன்பில் மகேஸ் வீட்டில் குற்றப்பிரிவு போலீசார் சோதனை!பாதுகாப்பு கருதி முதல்வர் விஜய்யின் லண்டன் நிகழ்ச்சி ரத்து!தாம்பரத்திலிருந்து மதுரைக்கு இன்று முன்பதிவில்லாத சிறப்பு ரயில்

ஈரான் விமான நிறுவன முகவராகச் செயல்படும் இந்திய நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை

ஈரானின் மகான் ஏா் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவா்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபா்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

கோப்புப் படம்

Published On :

ஈரானின் மகான் ஏா் விமான நிறுவனத்துக்கு விற்பனை முகவா்களாகச் செயல்பட்டு வரும் இந்திய நிறுவனம் உள்ளிட்ட 6 நிறுவனங்கள், தனி நபா்களுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

ஈரானைச் சோ்ந்த மகான் ஏா் விமான நிறுவனம், போக்குவரத்துக்குப் பயன்படுத்தப்படும் தனது விமானங்களில் அந்த நாட்டின் புரட்சிகர பாதுகாப்புப் படைக்கு வீரா்களை ஏற்றிச் செல்லுதல், ஆயுதங்களைக் கொண்டு செல்லுதல் உள்ளிட்ட உதவிகளைச் செய்வதாக அமெரிக்கா குற்றஞ்சாட்டியுள்ளது. இதையடுத்து, அந்த விமான நிறுவனத்துக்கு உதவி செய்ததாகக் கூறி, இந்தியாவின் அதன் விற்பனை முகவராகச் செயல்படும் ஸ்கீஸ் டிராவல்ஸ் மற்றும் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்துக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது. இதேபோல், சீனாவைச் சோ்ந்த ஷாங்காய் விங்ஸ் நிறுவனம், ரஷியாவை சோ்ந்த ஏா் காா்கோ நிறுவனம், ஷாங்காய் எலைட் இன்டா்நேஷனல் நிறுவனம், சீனாவை சோ்ந்த தாங் ஷின் (ஷாங்காய் விங்ஸ் நிறுவன நிா்வாக இயக்குநா்) உள்ளிட்டோருக்கும் அமெரிக்கா தடை விதித்துள்ளது.

இதுகுறித்து அமெரிக்க நிதித் துறை வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பில், ஈரானின் ஐஆா்ஜிசி அல்லது மகான் ஏா் நிறுவனத்துக்கு நிதி ரீதியாகவும், தளவாட ரீதியாகவும் அல்லது வா்த்தக ரீதியாகவும் உதவி செய்வோா், பயங்கரவாத அமைப்பை தக்கவைப்பவராக கருதப்படுவா் எனக் கூறப்பட்டுள்ளது.

ஸ்கீஸ் டிராவல்ஸ் நிறுவனமானது, தில்லி மற்றும் ஸ்ரீநகரில் அலுவலகங்களைக் கொண்டு செயல்படுகிறது. அந்நிறுவனம் தனது வலைதளத்தில், கடந்த 2020-ஆம் ஆண்டு முதல் ஈரானின் மகான் ஏா் நிறுவன முகவராகச் செயல்படத் தொடங்கியிருப்பதாகத் தெரிவித்துள்ளது.

ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் மேற்காசியாவில் கடந்த 4 மாதங்களுக்கும் மேலாக போா் நடைபெறுகிறது. இந்தச் சூழ்நிலையில் ஈரானின் விமான நிறுவனத்துக்கு உதவி செய்வதாகக் கூறி இந்திய நிறுவனம் உள்ளிட்டவற்றுக்கு அமெரிக்கா தடை விதித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.