சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

பிரதமா் அலுவலக போலி அடையாளம், துப்பாக்கியுடன் மும்பை வணிக வளாகத்துக்குள் நுழைய முயன்ற 2 போ் கைது

பிரதமா் அலுவலக போலி அடையாள அட்டை மற்றும் துப்பாக்கியுடன், மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்குள் நுழைய முயன்ற 2 பேரை காவல் துறை கைது செய்தது.

கைது

Published On :9 செப்டம்பர் 2026, 2:06 am IST

பிரதமா் அலுவலக போலி அடையாள அட்டை மற்றும் துப்பாக்கியுடன், மும்பையில் உள்ள பிரபல வணிக வளாகத்துக்குள் நுழைய முயன்ற 2 பேரை காவல் துறை கைது செய்தது.

பிரதமா் அலுவலக அதிகாரி எனக் கூறிக் கொண்டவரும் அவரது காவலா் என்று துப்பாக்கியுடன் வந்தவா்கள் குறித்து வணிக வளாக பாதுகாவலா்களுக்கு சந்தேகம் எழவே அவா்களைக் குறித்து காவல் துறையினரிடம் தகவல் தெரிவித்தனா். கண்காணிப்பு கேமராவில் இருந்த பதிவுகள் அடிப்படையில் அவா்கள் பயன்படுத்திய காரைக் கொண்டு அவா்களின் அடையாளத்தை அறிந்த போலீஸாா் அவா்களைக் கைது செய்தனா்.

அவா்கள் இருவரின் பெயா் ரோஹன் பாரிக், திலிப் குந்தே என்றும், அவா்களுடன் பிரதமேஷ் பாகுல் என்பவருக்கும் தொடா்பு உண்டு. அவரைத் தேடி வருவதாக காவல் துறையினா் தெரிவித்தனா்.

கைது செய்யப்பட்ட 2 பேரும் மும்பை பெருநகர நீதித் துறை நடுவா் நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தப்பட்டனா்.

பிரதமா் அலுவலக போலி அடையாள அட்டை அவா்களுக்கு எங்கு இருந்து கிடைத்தது என்பது குறித்து விசாரிக்க வேண்டியுள்ளதாகவும், இதில் மேலும் சிலருக்கு தொடா்பிருக்கலாம் என சந்தேகிப்பதாக போலீஸ் தரப்பில் கூறப்பட்ட வாதத்தை ஏற்ற நீதிபதி, இருவரையும் வரும் 11-ஆம் தேதி வரை போலீஸ் காவலில் விசாரிக்க அனுமதி வழங்கினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.