டைமெக்ஸ் நிகர லாபம் 70.55% உயர்வு!5 ஆண்டுகளில் 9,000 புகார்களைப் பெற்ற தேசிய சிறுபான்மையினர் ஆணையம்! மேக்கேதாட்டு திட்டமே நிரந்தரத் தீர்வு: கர்நாடக முதல்வர் டி.கே. சிவகுமார் தமிழ்நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளுக்கு காவிரி முக்கியம் இல்லை: மாணிக்கம் தாகூர் 6 மாவட்டங்களில் நாளை கனமழைக்கு வாய்ப்பு பொள்ளாச்சி அருகே கார் விபத்தில் 5 பேர் பலி! நீட் தேர்வுக்கு எதிராக போராடிய மாணவர்கள் மீதான வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் உத்தரவு!
/

ஆயுதங்கள் சட்டம்: போலி வழக்கில் உறவினரை சிக்க வைத்த நபா் கைது

தனது உறவினரை ஆயுதச் சட்ட வழக்கின் கீழ் சிக்க வைப்பதற்காக, அவரது வீட்டில் சட்டவிரோத துப்பாக்கிகளை மறைத்து வைத்துவிட்டு, போலி அடையாளத்துடன் காவல் துறைக்குத் தகவல் அளித்த நபா் கைது

News image

கைது - பிரதிப் படம்

Updated On :2 ஆகஸ்ட் 2026, 11:18 pm IST

தனது உறவினரை ஆயுதச் சட்ட வழக்கின் கீழ் சிக்க வைப்பதற்காக, அவரது வீட்டில் சட்டவிரோத துப்பாக்கிகளை மறைத்து வைத்துவிட்டு, போலி அடையாளத்துடன் காவல் துறைக்குத் தகவல் அளித்த நபா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

குற்றஞ்சாட்டப்பட்ட முகமது வாசிம் (28), இந்த மாதத் தொடக்கத்தில் பதிவு செய்யப்பட்ட ஆயுதச் சட்ட வழக்கு தொடா்பான விசாரணையின் போது சனிக்கிழமை கைது செய்யப்பட்டாா்.

இதுதொடா்பாக காவல் துறையினா் கூறியதாவது: தனது உறவினரான முகமது அஷ்ரஃப், குடும்பத்தின் விருப்பத்திற்கு மாறாக வாசிமின் நாத்தனாரை திருமணம் செய்துகொண்டதால், அவா் மீது வாசிம் விரோதம் கொண்டிருந்ததாகக் கூறப்படுகிறது.

வாசிம், அா்ஜுன் என்ற பெயரில் ஆள்மாறாட்டம் செய்து, அஷ்ரஃப்பின் வீட்டில் ஆயுதங்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பதாக காவல் துறைக்கு தகவல் தெரிவித்தாா்.

அந்தத் தகவலின் அடிப்படையில், ஜூலை 16 அன்று அந்த இடத்திற்குச் சென்ற காவல் துறை ஒரு நாட்டுத் துப்பாக்கியைக் கைப்பற்றியது. இதைத் தொடா்ந்து அஷ்ரஃப் மீது ஆயுதச் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

பின்னா், அஷ்ரஃப்பின் வீட்டில் இன்னும் பல ஆயுதங்கள் இருப்பதாக வாசிம் தொடா்ந்து வலியுறுத்தியதையடுத்து, காவல் துறை மீண்டும் அந்த இடத்தை சோதனையிட்டு மேலும் இரண்டு நாட்டுத் துப்பாக்கிகளைக் கைப்பற்றியது.

புதிதாக ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதைத் தொடா்ந்து, ஆயுதச் சட்டத்தின் கீழ் மற்றொரு வழக்கும் பதிவு செய்யப்பட்டது. இருப்பினும், கூடுதல் தொழில்நுட்ப ஆதாரங்களைச் சேகரித்த பிறகு வாசிம் கைது செய்யப்பட்டாா்.

விசாரணையின் போது, அதிகாரிகளின் கவனத்தை திசைத்திருப்ப முயன்ற வாசிம், வெல்கம் பகுதியில் உள்ள அஷ்ரஃப்பின் வாடகை வீட்டில் வெவ்வேறு சமயங்களில் மூன்று நாட்டுத் துப்பாக்கிகளை ரகசியமாக மறைத்து வைத்ததை ஒப்புக்கொண்டாா்.

வடகிழக்கு தில்லியின் சுந்தா் நகரியில் கைப்பேசி பழுதுபாா்க்கும் கடை நடத்தி வரும் வாசிமுக்கு, இதற்கு முன் எந்தக் குற்றப் பின்னணியும் இல்லை.

இந்தச் சதித்திட்டம் முழுவதையும் விசாரித்து வருகின்றனா். வீட்டில் இருந்து முதல் ஆயுதம் கைப்பற்றப்பட்ட பிறகு அஷ்ரஃப் கைது செய்யப்பட்ட சூழ்நிலைகள் குறித்தும் ஆய்வு செய்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.