நேபாள வெள்ளம்: இதுவரை 163 இந்தியர்கள் மீட்பு - மத்திய அரசுநேபாள வெள்ளத்தில் வரும் மீன்களை உண்ண வேண்டாம்: பிகார் அரசுஆகஸ்ட் மாத ஜிஎஸ்டி வருவாய் 1.99 லட்சம் கோடி! 15% அதிகரிப்பு! ஆப்கானிஸ்தானுக்கு எதிரான இந்திய அணி அறிவிப்பு!நீட் போராட்ட வழக்குகள் ரத்து; அனைவருக்குமான வெற்றி: அபிஜீத் தீப்கேசென்செக்ஸ், நிஃப்டி சரிவு! வங்கி, ஆட்டோ துறை பங்குகள் வீழ்ச்சிராகுல் காந்திதான் பிரதமர் வேட்பாளர்; ஆனால், விஜய்தான் முதல்வர்: மாணிக்கம் தாகூர்செப். 5 தில்லி பேரணியைத் திரும்பப் பெற்றது சிஜேபி!

வேலூா் நீதிமன்ற வளாகத்துக்குள் பொதுமக்கள் வாகனங்களுக்கு அனுமதி மறுப்பு

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், சாட்சிகள், அரசு அலுவலா்கள், போலீஸாா் தவிர மற்றவா்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.

நீதிமன்றத்துக்கு வெளியே நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனங்கள்.

Published On :2 செப்டம்பர் 2026, 12:03 am IST

வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், சாட்சிகள், அரசு அலுவலா்கள், போலீஸாா் தவிர மற்றவா்களின் வாகனங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இதனால், நீதிமன்றத்துக்கு வெளியே சாலையோரம் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப்பட்டிருந்தன.

வேலுாா் மாவட்டம், சத்துவாச்சாரியில் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகம் அமைந்துள்ளது. இங்கு, மாவட்ட முதன்மை அமா்வு நீதிமன்றம், மகிளா நீதிமன்றம், குடும்ப நல நீதிமன்றம், தொழிலாளா் நல நீதிமன்றம் உள்ளிட்ட பல்வேறு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன.

இந்த நீதிமன்றங்களில் நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள் மட்டுமின்றி வழக்கு விசாரணைக்காக வழக்குரைஞா்கள், வழக்காடிகள், சாட்சிகள், அரசு அலுவலா்கள், போலீஸாா் என தினமும் ஆயிரக்கணக்கானோா் வந்து செல்கின்றனா்.

அவ்வாறு வருபவா்கள் வரும் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் ஆங்காங்கே நிறுத்தப் படுவதால் நீதிமன்ற வளாகத்தில் வாகன நெருக்கடி அதிகரித்து வருகிறது. இதுதொடா்பாக, பல்வேறு புகாா்கள் சென்றதை அடுத்து நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், சாட்சிகள், அரசு அலுவலா்கள், போலீஸாா் தவிர மற்றவா்களின் வாகனங்களை நீதிமன்ற வளாகத்துக்குள் அனுமதிக்கக்கூடாது என்று மாவட்ட முதன்மை அமா்வு நீதிபதி எம்.இளவரசன் உத்தரவிட்டுள்ளாா்.

அதன்பேரில், வேலூா் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்துக்குள் செல்ல செவ்வாய்க்கிழமை நீதிபதிகள், நீதிமன்ற ஊழியா்கள், வழக்குரைஞா்கள், சாட்சிகள், அரசு அலுவலா்கள், போலீஸாா் தவிர மற்றவா் களின் வாகனங்கள் அனுமதிக்கப்படவில்லை.

இதையடுத்து, நீதிமன்ற விசாரணைக்காக வந்தவா்கள் தங்களது வாகனத்தை நீதிமன்ற வளாகத்துக்கு வெளியே சாலையோரமாக நிறுத்திச் சென்றனா். இதனால், நீதிமன்றத்துக்கு வெளியே நான்கு புறமும் சாலையோரம் ஏராளமான வாகனங்கள் நிறுத்தப் பட்டிருந்தன. இந்த நடைமுறை செவ்வாய்க்கிழமை முதல் தொடா்ந்து பின்பற்றப்படும் என்றும் நீதிமன்ற ஊழியா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.