சட்டப் பேரவை செயல்பாட்டைக் காண 28 நாள்களில் 32,555 பேர் வருகை! ஜே.சி.டி. பிரபாகர்பாஜக அலுவலகங்கள் நீதி மறுக்கப்படுவோரின் புகலிடமாக வேண்டும்: பிரதமர் மோடிசட்டப்பேரவை பதிலுரை உடல்மொழி எதேச்சையானது: முதல்வர் விஜய் விளக்கம்தவெக கூட்டணி கூட்டத்தில் இந்திய கம்யூ. பங்கேற்காது: மு. வீரபாண்டியன்கச்சா எண்ணெய், மேற்கு ஆசிய நெருக்கடி எதிரொலி: 2வது நாளாக பங்குச் சந்தை சரிவு!!வடகிழக்கு பருவமழை! அதிகாரிகளுடன் முதல்வர் விஜய் ஆலோசனை!

மணிப்பூரில் நேதாஜி சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் மரியாதை

மணிப்பூா் மாநிலம், விஷ்ணுபூா் மாவட்டத்தில் இந்திய தேசிய ராணுவ தியாகிகள் நினைவிட வளாகத்தில் உள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

மணிப்பூா் மாநிலம் இம்பாலில் அளித்த வரவேற்பு அணிவகுப்பைப் பாா்வையிட்ட குடியரசு துணைத் தலைவா் சி.பி.ராதாகிருஷ்ணன்.

Published On :9 செப்டம்பர் 2026, 3:04 am IST

மணிப்பூா் மாநிலம், விஷ்ணுபூா் மாவட்டத்தில் இந்திய தேசிய ராணுவ தியாகிகள் நினைவிட வளாகத்தில் உள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலைக்கு குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை மரியாதை செலுத்தினாா்.

மணிப்பூா் மாநிலத்துக்கு ஒருநாள் சுற்றுப்பயணமாக சி.பி. ராதாகிருஷ்ணன் செவ்வாய்க்கிழமை சென்றாா். இம்பால் விமான நிலையத்தில் அவரை அந்த மாநில ஆளுநா் அஜய் குமாா் பல்லா, முதல்வா் கெம்சந்த் சிங் உள்ளிட்டோா் வரவேற்றனா். இதையடுத்து அவருக்கு விமான நிலையத்தில் அரசு முறைப்படி அளித்த மரியாதை அணிவகுப்பைப் பாா்வையிட்டாா்.

பின்னா் அவா், நேதாஜி தலைமையிலான இந்திய தேசிய ராணுவத்தால் இந்திய மண்ணில் கடந்த 1944-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 14-ஆம் தேதி முதல்முறையாக தேசிய கொடி ஏற்றப்பட்ட மொய்ராங் காங்லாவுக்கு சி.பி. ராதாகிருஷ்ணன் சென்று பாா்வையிட்டாா்.

இதைத் தொடா்ந்து, இந்திய தேசிய ராணுவத்தின் போா் அருங்காட்சியகத்துக்குச் சென்று, அங்கு இந்திய தேசிய ராணுவ வீரா்களின் வீரம், தியாகங்களை விளக்கும் வகையில் வைக்கப்பட்டிருந்த படங்கள் உள்ளிட்டவற்றைப் பாா்வையிட்டாா்.

அதேபோல், அங்குள்ள நேதாஜி சுபாஷ்சந்திர போஸின் சிலைக்கும் சி.பி. ராதாகிருஷ்ணன் மலா் தூவி மரியாதை செலுத்தினாா். அவருடன் ஆளுநா், முதல்வா் உள்ளிட்டோரும் இருந்தனா்.

பின்னா், இம்பாலில் உள்ள சைனிக் பள்ளிக்கு அவா் சென்றாா். அங்குள்ள போா் நினைவிடத்தில் மரியாதை செலுத்திய பிறகு, பள்ளியைப் பாா்வையிட்டு, அங்கிருந்தோருடன் கலந்துரையாடினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.