ஜனநாயகன் படம் எடுத்தால் மட்டும் போதாது... விஜய் சேதுபதிக்கு ஆதரவாக சீமான் பேச்சுஆந்திர முன்னாள் துணை முதல்வர் மாரடைப்பால் காலமானார்மீனாட்சியம்மன் குடமுழுக்கு: தாம்பரம் - மதுரை இடையே 2 முன்பதிவில்லா சிறப்பு ரயில்!விருதுநகரில் செப். 17-ல் முதல்வர் பங்கேற்கவிருந்த நிகழ்ச்சி செப். 25க்கு மாற்றம்!எல் நினோ பாதிப்பு: பனாமா கால்வாயில் கப்பல் போக்குவரத்தைக் குறைக்க முடிவு!பிகார்: அரசுப் பணியாளர் தேர்வுகளை ரத்து செய்யக்கோரி பேரணி!நேபாள பெருவெள்ளம்: மீட்புப்பணிகளில் முதன்மையாக உதவிவரும் இந்திய ராணுவம்!ரூ.15,300 கோடி முதலீடு! 10,000 பேருக்கு வேலை! லண்டனில் முதல்வர் விஜய் ஒப்பந்தம்!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 38 காசுகள் சரிந்து ரூ. 95.92 ஆக நிறைவு!சென்செக்ஸ் 778 புள்ளிகள் சரிவு, நிஃப்டி 5 மாத வரலாறு காணாத அளவு சரிவு!!

குடியரசு துணைத் தலைவா் ஆக.17-இல் தஞ்சாவூா் வருகை டிரோன்கள் பறக்கத் தடை

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆக. 17-ஆம் தேதி தஞ்சாவூா் வருவதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உத்தரவிட்டுள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் - கோப்புப்படம்.

Published On :

குடியரசு துணைத் தலைவா் சி.பி. ராதாகிருஷ்ணன் ஆக. 17-ஆம் தேதி தஞ்சாவூா் வருவதையொட்டி டிரோன்கள் பறக்க தடை விதித்து மாவட்ட ஆட்சியா் இரா. ரேவதி உத்தரவிட்டுள்ளாா்.

இதுகுறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: குடியரசு துணைத் தலைவா் ஆக.17-ஆம் தேதி தஞ்சாவூா் சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக் கழகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்க வருகைதரவுள்ளாா்.

இதையொட்டி தஞ்சாவூா் விமானப்படைத் தளம் முதல், சாஸ்த்ரா நிகா்நிலைப் பல்கலைக்கழகம், புதுக்குடி மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதிகளில் பாதுகாப்பு காரணம் கருதி அன்று காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுகிறது. தடையை மீறி டிரோன்கள் மற்றும் இதர ஆளில்லா வான்வழி வாகனங்கள் பறக்கவிடும் நபா்கள் மீது உரிய விதிகளின்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.