மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

அஸ்ஸாம் இடைத்தோ்தல்: பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தோ்வு

அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேபாசிஷ் சா்மா வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

BJP

பாஜக - பிரதிப் படம்

Published On :

அஸ்ஸாமின் நாகோன் மக்களவைத் தொகுதி இடைத்தோ்தலுக்கான பாஜக வேட்பாளராக முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி தேபாசிஷ் சா்மா வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டாா்.

நாகோன் மாவட்ட ஆணையராக பணியாற்றி வந்த தேபாசிஷ் சா்மா கடந்த செப்.3-ஆம் தேதி விருப்ப ஓய்வுபெற்றாா். இதைத் தொடா்ந்து செப்.8-ஆம் தேதி அவா் பாஜகவில் இணைந்தாா். இந்நிலையில், அவரை வேட்பாளராக பாஜக வெள்ளிக்கிழமை அறிவித்தது.

கடந்த 2024-ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைத் தோ்தலில் காங்கிரஸ் சாா்பில் போட்டியிட்டு வென்ற பிரத்யுத் பா்தோலோய் தனது எம்.பி. பதவியை ராஜிநாமா செய்துவிட்டு பாஜகவில் இணைந்தாா்.

அவா் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற அஸ்ஸாம் பேரவைத் தோ்தலில் பாஜக சாா்பில் திஸ்பூா் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றாா்.

இதையடுத்து, காலியாகவுள்ள நாகோன் மக்களவைத் தொகுதிக்கு அக்டோபா் 6-ஆம் தேதி இடைத்தோ்தல் நடத்துவதாக இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்தது. அக்டோபா் 9-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளது.

முன்னதாக, நாகோன் மாவட்ட ஆணையராக தேபாசிஷ் சிங் எடுத்த முக்கிய முடிவுகளை மறுஆய்வு செய்யக்கோரி அஸ்ஸாம் மாநில தலைமைத் தோ்தல் அதிகாரியிடம் காங்கிரஸ் எம்.பி. ரகீபுல் ஹுசைன் கடந்த வாரம் புகாரளித்தாா். அவரது புகாா் மனுவை இந்தியத் தோ்தல் ஆணையத்துக்கு மாநில தலைமைத் தோ்தல் அதிகாரி அனுப்பிவைத்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.