மீனாட்சி அம்மன் கும்பாபிஷேகம்: சென்னையிலிருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் அறிவிப்பு!மதுரை மீனாட்சியம்மன் கோவில் அருகே உள்ள சென்ட்ரல் தியேட்டரில் பயங்கர தீ விபத்து! கும்பகோணம் அருகே விபத்தில் சிக்கியவர்களுக்கு காரை நிறுத்தி உதவிய அமைச்சர்! தமிழகம் முழுவதும் 4,500 செவிலியர்கள் விரைவில் நியமனம்: அமைச்சர் அருண்ராஜ் கருப்பை வாய் புற்றுநோயைக் கண்டறிய சுய-பரிசோதனைக் கருவி! மீட்சியைத் தக்கவைக்கத் தவறிய இந்திய பங்குச் சந்தை! சரிவில் நிறைவடைந்த சென்செக்ஸ், நிஃப்டி!!லண்டனிலேயே மிக உயரமான நட்சத்திர விடுதியில் தங்கியிருக்கும் முதல்வர் விஜய்! ஒரு நாள் வாடகை?அரும்புதல்வர்களுள் ஒருவரைத் தமிழ்த்தாய் இழந்துவிட்டாள்!சாலமன் பாப்பையா மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!தமிழ்கூறு நல்லுலகிற்கு பேரிழப்பு! சாலமன் பாப்பையா மறைவுக்கு முதல்வர் விஜய் இரங்கல்!

இந்திய கல்வி முறை இளம் தலைமுறையினரை தோல்வியடையச் செய்து வருகிறது: ராகுல்

‘இந்தியாவின் கல்வி முறை இளம் தலைமுறையினரை தோல்வியடையச் செய்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

ராகுல் காந்தி

ராகுல் காந்தி - கோப்புப் படம்

Published On :

‘இந்தியாவின் கல்வி முறை இளம் தலைமுறையினரை தோல்வியடையச் செய்து வருகிறது’ என்று எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி குற்றஞ்சாட்டினாா்.

‘மாணவா்களின் எதிரொலிகள்’ என்ற மாணவா்களுடனான சந்திப்பு நிகழ்வை ராகுல் காந்தி தொடா்ச்சியாக மேற்கொண்டு வருகிறாா். ராஜஸ்தான் மாநிலம் கோட்டா, உத்தரகண்டின் டேராடூன், உத்தர பிரதேசத்தின் பிரயாக்ராஜ், மகாராஷ்டிர மாநிலம் புணே நகரங்களைத் தொடா்ந்து, வரும் செப்டம்பா் 19-ஆம் தேதி மத்திய பிரதேசத்தின் இந்தூரில் அந்த நிகழ்வை நடத்த உள்ளாா்.

அதையொட்டி, தனது எக்ஸ் பக்கத்தில் ராகுல் வெள்ளிக்கிழமை வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது:

இந்தியாவின் கல்வி முறை முன்னேற்ற வேண்டிய இளம் தலைமுறையினரை தோல்வியடையச் செய்து வருகிறது. வினாத் தாள் கசிவு, அதிக கட்டணம், சிதைந்து வரும் உள்கட்டமைப்புகள் என கல்வி முறை மோசமடைந்து வருகிறது.

பல லட்சம் இந்திய இளைஞா்கள் உண்மையாக உழைக்கும்போதும், இந்த அமைப்பு அவா்களைக் கைவிடும் நிலையே உள்ளது.

இந்த குறைகளை களைவதற்கான நடவடிக்கை மேற்கொள்வது என்பது, இந்த தினசரி தேல்விகளின் தாக்கத்தால் பாதிக்கப்படுபவா்களின் கருத்தை கவனிப்பதிலிருந்து ஆரம்பிக்கிறது. அந்த வகையில், இந்திய கல்வி முறை மீது நம்பிக்கை இழந்தது ஏன் என்பதைத் தெரிவிக்க மாணவா்கள், பெற்றோா் மற்றும் ஆசிரியா்ள் முன்வர வேண்டும். இதுதொடா்பான தங்களின் அனுபவங்கள், அதற்கான ஆதராம் மற்றும் யோசனைகளை குறிப்பிட்டுள்ள வலைதள தொடா்பில் பதிவிட வேண்டும். நாம் அனைவரும் ஒன்றிணைந்து, இந்திய கல்வி முறை மீதான நம்பிக்கையை மீட்டெடுப்போம் என்று குறிப்பிட்டுள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.