
நில அபகரிப்பு: பிரதமர் மோடியிடம் புகாரளித்த 81 வயது பள்ளித் தோழர்
நில ஆக்கிரமிப்பு தொடர்பாக பிரதமர் மோடியிடம் பள்ளித் தோழர் புகார் அளித்தது குறித்து...
பிரதமர் மோடியிடம் புகாரளித்த பள்ளித் தோழர்
மும்பையில் தனக்குச் சொந்தமான நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடியிடம் அவரது பள்ளித் தோழர் அஸ்கரலி வோஹ்ரா (81) புகார் அளித்துள்ளார்.
குஜராத் மாநிலம் வட்நகரில் உள்ள பிஎன் உயர்நிலைப் பள்ளியில் பிரதமர் மோடியுடன் பள்ளியில் படித்தவர் அஸ்கரலி வோஹ்ரா (81). இவருக்குச் சொந்தமாக மும்பையில் சுமார் 2,810 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட நிலத்தை 1989-ல் சட்டபூர்வமாக பதிவு செய்து, வாங்கினார். இந்த நிலையில், கடந்த 2011-ல் போலியான ஆவணங்கள் மூலம் இவரது நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக அவர் குற்றம் சாட்டினார்.
அவருக்குத் தெரியாமலேயே அவரது நிலத்தை இரு கட்டுமான நிறுவனங்களின் பெயருக்கு மாற்றப்பட்டதாகவும் அவர் புகார் அளித்துள்ளார். இந்த நில ஆக்கிரமிப்பில் பாஜக எம்எல்ஏ நரேந்திர மேத்தாவுக்கும் தொடர்பிருப்பதாக அஸ்கரலி கூறியுள்ளார்.
இந்த ஆக்கிரமிப்பு விவகாரம் தொடர்பாக 2015-ல் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு, வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளது. இருப்பினும், காவல் துறை, வருவாய்த் துறை, உள்ளாட்சி அமைப்புகளிடம் பலமுறை அஸ்கரலி புகார் மனு அளித்தும் தீர்வு கிடைக்காத நிலையில், கடந்த செப். 8 ஆம் தேதியில் பிரதமரும் பள்ளித் தோழருமான மோடியை நேரில் சந்தித்து முறையிட்டுள்ளார். மேலும், இந்தச் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிடுமாறு பிரதமரிடம் அஸ்கரலி கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, இந்த விவகாரத்தில் உள்ளூர் நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, புகாரில் சம்பந்தப்பட்ட இரு நிறுவனங்களும் செப். 16-ல் நேரில் ஆஜராகி விளக்கமளிக்குமாறும் உள்ளூர் நிர்வாகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Summary
81-year-old ex-schoolmate meets PM, seeks Central Agency Probe probe into alleged land grab
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







