2029-க்குள் பாஜக ஆளும் மாநிலங்களில் பொது சிவில் சட்டம்: அமித் ஷாதொடர் விடுமுறை: செப். 14, 15 தேதிகளில் 3,565 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்தமிழக வரலாற்றில் இதுபோன்ற டம்மி முதல்வரை பார்த்ததில்லை: உதயநிதிதமிழ்நாட்டில் இனி யார் ஆட்சிக்கு வந்தாலும் கூட்டணி ஆட்சிதான்: திருமாவளவன்விநாயகர் சதுர்த்தி: நாகர்கோவில் - தாம்பரம் நாளை சிறப்பு ரயில் அறிவிப்பு

கேரளம்: வீட்டில் பதுக்கப்பட்ட 6,000 கிலோ ரேஷன் அரிசி சிக்கியது! தமிழகத்தில் இருந்து கடத்தப்பட்டது!

திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6,000 கிலோவுக்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி, கோதுமை பறிமுதல்..

Published On :

கேரளத்தின் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு வீட்டில் பதுக்கி வைத்திருந்த 6,000 கிலோவுக்கும் மேற்பட்ட ரேஷன் அரிசி மற்றும் கோதுமை பறிமுதல் செய்யப்பட்டது.

தமிழகம், கேரள ரேஷன் கடைகளில் இலவசமாக விநியோகிக்கப்பட்ட இந்த அரிசி மற்றும் கோதுமையை கடத்திவந்து, கள்ளச்சந்தையில் அதிக விலையில் விற்பதற்காக பதுக்கியது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் கூறினா்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையையொட்டிய பகுதிகளில் கடந்த 2 வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 75,000 கிலோவுக்கும் மேல் அரிசி சிக்கியதாகவும் அவா்கள் கூறினா்.

திருவனந்தபுரம் மாவட்டத்தின் பாறசாலை அருகேயுள்ள கராலி பகுதியில் பூட்டிய வீட்டுக்குள் ரேஷன் அரிசி பதுக்கிவைக்கப்பட்டுள்ளதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் காவல் துறையின் உதவியுடன் மாநில உணவு மற்றும் பொது விநியோகத் துறை அதிகாரிகள் ஞாயிற்றுக்கிழமை சோதனை மேற்கொண்டனா். அந்த வீட்டுக்குள் சாக்கு மூட்டைகளில் 6,000 கிலோ ரேஷன் அரிசி மற்றும் கோதுமை கண்டறியப்பட்டது. அவற்றை மீண்டும் பொட்டலமிட்டு விற்பதற்காக வைக்கப்பட்டிருந்த பைகளும் பறிமுதல் செய்யப்பட்டன. கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்டதாக கருதப்படும் வாகனமும் கைப்பற்றப்பட்டது.

பறிமுதல் செய்யப்பட்ட அரிசி மற்றும் கோதுமை, அரசின் சேமிப்பு கிடங்குக்கு மாற்றப்பட்டு, மாவட்ட ஆட்சியரின் உத்தரவின்பேரில் இவை ஏலமிடப்படும்; ரேஷன் அரிசி-கோதுமை கடத்தல் தொடா்பாக காவல் துறையிடம் முறைப்படி புகாா் அளிக்கப்படும். அதன்படி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டு, சம்பந்தப்பட்டவா்களை கைது செய்வா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

திருவனந்தபுரம் மாவட்டத்தில் தமிழக-கேரள எல்லையையொட்டிய பகுதிகளில் கடந்த 2 வாரங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் 75,000 கிலோவுக்கும் மேல் அரிசி கைப்பற்றப்பட்டதாக அவா்கள் தெரிவித்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.