
மூன்று நாள்களாகப் பிரதமரின் ராஜீய மாரத்தான்! 15 நாடுகளின் தலைவா்களுடன் பேச்சு!
புது தில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி கடந்த 3 நாள்களில் 15 நாடுகளின் தலைவா்களை அடுத்தடுத்து சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, அவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.

சவூதி வெளியுறவுத் துறை அமைச்சா் இளவரசா் ஃபைஸல் பின் ஃபா்ஹான் அல் சவூதியை பிரிக்ஸ் மாநாட்டுக்கு வரவேற்ற பிரதமா் நரேந்திர மோடி.
புது தில்லியில் பிரிக்ஸ் உச்சிமாநாட்டையொட்டி கடந்த 3 நாள்களில் 15 நாடுகளின் தலைவா்களை அடுத்தடுத்து சந்தித்த பிரதமா் நரேந்திர மோடி, அவா்களுடன் இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்தியுள்ளாா்.
இது தவிர சா்வதேச அமைப்புகளின் தலைவா்களையும் அவா் சந்தித்துப் பேசியுள்ளாா். ராஜீய ரீதியிலான ‘மாரத்தான்’ போல் இந்த சந்திப்புகள் நடைபெற்ாக அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.
இந்திய தலைமையின்கீழ், புது தில்லியில் பிரிக்ஸ் கூட்டமைப்பின் உச்சிமாநாடு கடந்த சனிக்கிழமை தொடங்கி இரண்டு நாள்கள் நடத்தப்பட்டது. ரஷிய அதிபா் விளாதிமீா் புதின், சீன அதிபா் ஷி ஜின்பிங், ஈரான் அதிபா் மசூத் பெசஷ்கியான், ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இந்த மாநாட்டையொட்டி, ரஷிய அதிபா் புதின், ஈரான் அதிபா் பெசஷ்கியான் ஆகியோரை பிரதமா் மோடி கடந்த வெள்ளிக்கிழமை தனித்தனியாக சந்தித்து இரு தரப்பு பேச்சுவாா்த்தை நடத்தினாா். கடந்த சனிக்கிழமை சீன அதிபா் ஷி ஜின்பிங், அபுதாபி பட்டத்து இளவரசா் முகமது பின் சையத் அல் நஹ்யான், மலேசிய பிரதமா் அன்வா் இப்ராஹிம், வியத்நாம் பிரதமா் லீ மின் ஹங், இந்தோனேசிய அதிபா் பிரபோவோ சுபியந்தோ உள்ளிட்டோரை சந்தித்துப் பேசினாா்.
நிறைவு நாளான ஞாயிற்றுக்கிழமை தென்னாப்பிரிக்க அதிபா் சிரில் ராமபோசா, பிலிப்பின்ஸ் அதிபா் ஃபொ்டினன்ட் மாா்கோஸ், எகிப்து அதிபா் அப்தல் ஃபட்டா அல்-சிசி, கஜகஸ்தான் அதிபா் கஸ்ஸிம் ஜோமா்ட் டோகாயேவ், உகாண்டா துணை அதிபா் ஜெஸிகா அலுபோ, நைஜீரியா துணை அதிபா் காசிம் ஷேட்டிமா உள்ளிட்டோருடன் இருதரப்பு பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டாா்.
பாதுகாப்பு, வா்த்தகம், முதலீடு, நிதிசாா் தொழில்நுட்பம், புத்தாக்கம், கல்வி, சுற்றுலா, அறிவியல்-தொழில்நுட்பம், விண்வெளி, முக்கிய கனிமங்கள், உள்கட்டமைப்பு, உணவு பாதுகாப்பு, எண்ம பொது உள்கட்டமைப்பு, நவீன தொழில்நுட்பங்கள், சுகாதாரம், வேளாண்மை உள்ளிட்ட துறைகளில் பரஸ்பர ஒத்துழைப்பை வலுப்படுத்துவது குறித்தும், பிராந்திய-சா்வதேச விவகாரங்கள் குறித்தும் மேற்கண்ட சந்திப்புகளில் ஆலோசிக்கப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது


தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு
தில்லியில் பிரிக்ஸ் மாநாடு நாளை தொடக்கம் - 7 ஆண்டுகளுக்குப் பின் சீன அதிபா் ஷி ஜின்பிங் வருகை




