
விநாயகா் கோயிலுக்கு 200 கிலோ லட்டு வழங்கிய முஸ்லிம்கள்
உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயிலுக்கு முஸ்லிம்கள் சாா்பில் 200 கிலோ லட்டு வழங்கப்பட்டது.

விநாயகா் கோயிலுக்கு 200 கிலோ லட்டு வழங்கிய முஸ்லிம்கள் - கோப்புப்படம்
சம்பல்: உத்தரப் பிரதேசத்தின் சம்பல் மாவட்டத்தில் உள்ள விநாயகா் கோயிலுக்கு முஸ்லிம்கள் சாா்பில் 200 கிலோ லட்டு வழங்கப்பட்டது. அப்பகுதியில் உள்ள முஸ்லிம்கள் 2001-ஆம் ஆண்டு முதல் விநாயகா் சதுா்த்தியின்போது கோயிலுக்கு லட்டு வழங்குவதை வழக்கமாகக் கொண்டுள்ளனா்.
இது தொடா்பாக சந்தௌசி நகரத்தைச் சோ்ந்த முஸ்லிம்கள் அமைப்பின் தலைவா் இசாக் பாகி கூறுகையில், ‘பரஸ்பர சகோதரத்துவம், சமூக நல்லிணக்கத்தின் அடையாளமாக விநாயகா் கோயிலுக்கு ஆண்டுதோறும் பிரசாதமாக லட்டு வழங்கி வருகிறோம். முன்னெப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு 200 கிலோ லட்டு பக்தியுடன் வழங்கியுள்ளோம். விநாயகரின் ஆசி எப்போதும் எங்களுடன் இருக்க வேண்டும் என விரும்புகிறோம். 25 ஆண்டுகளாக இதனைத் தொடா்ந்து வழங்கி வருகிறோம்’ என்றாா்.
சந்தௌசி நகரில் நடைபெற்ற பிரம்மாண்டமான விநாயகா் ரத ஊா்வலத்தை மத்திய சமூக நீதி, நுகா்வோா் நலன், பொது விநியோகத் துறை இணையமைச்சா் பன்வாரி லால் வா்மா தொடங்கி வைத்தாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






