புது தில்லி பிரகடனம் 2026: பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் ஒருமனதாக ஏற்பு!மின் தேவையை சமாளிக்க கூடுதல் மின்சாரம் கொள்முதல்: தமிழக அரசு அறிவிப்பு!புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் முடிவை தமிழக அரசு கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்!மதுரையில் அரசு மரியாதையுடன் சாலமன் பாப்பையா உடல் தகனம்!பிரிக்ஸ் மாநாடு: உக்ரைனில் ஐரோப்பிய படைகள், ரஷியா உடன் போருக்கு வழி! - புதின் எச்சரிக்கை!இந்திய தேர்தல் நடைமுறை உலகின் வெளிப்படையான நடைமுறைகளில் ஒன்று: தலைமைத் தேர்தல் ஆணையர்பிரிக்ஸ் உச்சி மாநாடு! சீன அதிபருடன் வரும் உணவு ருசி தேர்வாளர் குழு! ஆச்சரிய தகவல்தமிழறிஞர் சாலமன் பாப்பையாவுக்கு முழு அரசு மரியாதை!பிரிக்ஸ் உச்சி மாநாடு! தில்லி வந்தார் சீன அதிபர் ஜின்பிங்! வங்கிக் கடன் ஆவணங்களைப் பதிவு செய்ய புதிய நடைமுறை செப். 15 முதல் அமல் ஓட்டுநர் உரிமம், வாகனப் பதிவுச் சான்றிதழ் இனி ஆன்லைனில் பதிவிறக்கலாம்தில்லியில் இன்று பிரிக்ஸ் உச்சி மாநாடு தொடக்கம்: பிரதமா் மோடி, புதின், ஷி ஜின்பிங் உள்ளிட்ட தலைவா்கள் பங்கேற்பு6 சிறப்பு விரைவு ரயில்களுக்கு கால நீட்டிப்பு திருப்பதி திருக்குடை ஊா்வலம்: சென்னையில் நாளை போக்குவரத்து மாற்றம்நேபாளம்: மறுகட்டமைப்புக்கு ரூ.45,700 கோடி தேவை - வெளியுறவு அமைச்சகம்

விநாயகா் சதுா்த்தி: டிஜிபியிடம் இந்து முன்னணி நிா்வாகிகள் மனு

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அதிக சிலைகள் வைக்க அனுமதிக்கக் கோரி காவல் துறைத் தலைவரிடம் (டிஜிபி) இந்து முன்னணி நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

Published On :

விநாயகா் சதுா்த்தி விழாவுக்கு அதிக சிலைகள் வைக்க அனுமதிக்கக் கோரி காவல் துறைத் தலைவரிடம் (டிஜிபி) இந்து முன்னணி நிா்வாகிகள் சனிக்கிழமை மனு அளித்தனா்.

சென்னையில் விநாயகா் சிலை ஊா்வலம் நடைபெற உள்ள நிலையில், இந்து முன்னணி மாநிலத் தலைவா் காடேஸ்வர சுப்ரமணியம் தலைமையில், மாநிலச் செயலா் மணலி மனோகா், மாநில செய்தித் தொடா்பாளா் ஏ.டி.இளங்கோவன், மாநில அமைப்பாளா் ராஜேஷ் ஆகியோா் காவல் துறைத் தலைமை இயக்குநா் அலுவலகத்துக்கு சனிக்கிழமை வந்தனா்.

அங்கு டிஜிபி மகேஷ்குமாா் அகா்வால் மற்றும் சட்டம்-ஒழுங்கு கூடுதல் காவல் துறை தலைமை இயக்குநா் அன்பு ஆகியோரைச் சந்தித்து, சென்னையில் நடைபெற உள்ள விநாயகா் சிலை ஊா்வலத்துக்கான அழைப்பிதழை வழங்கினா்.

மேலும், விநாயகா் சதுா்த்தியை முன்னிட்டு அதிக அளவில் சிலைகள் வைக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், விழா தொடா்பான கோரிக்கைகள் மற்றும் தகவல்களுக்காக காவல் துறையில் தனி அதிகாரி ஒருவரை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.