கோல்டி பிரார் பெயரில் ரூ. 200 கோடி கேட்டு தில்லி பெண்ணுக்கு மிரட்டல்!
கனடா கும்பல் தலைவன் கோல்டி பிரார் பெயரில் தில்லி பெண்ணுக்கு மிரட்டல் விடுத்தது பற்றி..

கோல்டி பிரார் பெயரில் மிரட்டல் - file photo
தில்லியைச் சேர்ந்த பெண்ணிடம் கனடாவைச் சேர்ந்த கேங்ஸ்டர் கோல்டி பிரார் பெயரில் வெளிநாட்டு எண்ணிலிருந்து வந்த அழைப்பின் மூலம் ரூ. 200 கோடி பணம் கேட்டு மிரட்டல் வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
புகாரின் அடிப்படையில்,
கனடா கும்பல் தலைவன் கோல்டி பிரார் பெயரை பயன்படுத்தி வெளிநாட்டு எண்ணிலிருந்து ரூ. 200 கோடி கேட்டு மிரட்டிய மர்ம அழைப்பால் தலைநகரை அதிரவைத்துள்ளது.
வடக்கு தில்லியின் சிவில் லைன்ஸ் காவல் நிலையில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சிறப்பு பிரிவு குழுவினர் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வருகின்றனர்.
வெளிநாட்டு எண்ணிலிருந்து மிரட்டல் அழைப்பு வந்ததாகப் புகார் தெரிவித்ததைத் தொடர்ந்து, சிவில் லைன்ஸ் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதாக காவல்துறை கூறியது.
இந்த வழக்கு தொடர்பான உண்மைகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், புகார்தாரர் இருவேறு தொகையைக் குறிப்பிட்டதால், தொகையை உறுதிப்படுத்தப்பட்டு வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
தனது மாமனாரின் மறைவுக்குப் பிறகு அப்பெண்ணுக்குக் குடும்பத் தகராறு நிலவி வருவதாகவும், அந்தச் சூழலில் இந்த மிரட்டல் அழைப்பு விடுக்கப்பட்டதா என்பது குறித்தும் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும் காவல்துறை கூறியது.
அழைப்பு விடுத்தவர் யார், அதற்கான நோக்கம் என்ன? அழைப்பு விடுத்தவருக்கும் கோல்டி பிராருக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா? என்பது குறித்தும் காவல்துறை விசாரித்து வருகிறது.
வழக்கின் உண்மைகள் சரிபார்க்கப்பட்டு வருவதாகவும், இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாகவும் காவல்துறை தெரிவித்தது.
தலைநகரில் இதுவரை கோரப்பட்ட மிரட்டல் பணத் தொகைகளிலேயே இதுவே மிக அதிகபட்ச தொகை என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது.
கோல்டி பிரார் யார்?
கோல்டி பிரார் பஞ்சாபைச் சேர்ந்த, கனடாவை மையமாகக் கொண்டு செயல்பட்டதாக இந்திய அதிகாரிகளால் தேடப்படும் கேங்ஸ்டர் குற்றவாளி ஆவார். அவர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலுடன் நெருங்கிய தொடர்புடையவர் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.


