
செய்யறிவுக்கு மாற்றுவழி நேரடி இசை நிகழ்ச்சிகள்! பாடகி சரஸ் மேனன்
சுற்றுலா சிறப்பு கருத்தரங்கில் இசைக் கலைஞர்களின் விவாதம் பற்றி...
இசைக் கலைஞர்கள் சரஸ் மேனன், ஸ்ரவன் ஸ்ரீதர் மற்றும் ஃபால்ட் காய் - TNIE
செய்யறிவு வளர்ந்து வரும் சூழலில், நேரடி இசை நிகழ்ச்சிகள் ஒரு மாற்றத்தின் பகுதியாக இருக்கும் என்று பாடகி சரஸ் மேனன் தெரிவித்துள்ளார்.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று காலை தொடங்கி நடைபெற்று வருகின்றன.
இந்த கருத்தரங்கில் இசைக் கலைஞர்கள் சரஸ் மேனன், ஸ்ரவன் ஸ்ரீதர் மற்றும் ஃபால்ட் காய் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினர்.
சரஸ் மேனன் பேசுகையில், “சுற்றுலா என்பது ஒரு அனுபவமாகவும், நிம்மதியையும் கொடுக்க வேண்டும். சுற்றுலா செல்லும் இடம் அழகாகவும் அமைதியாகவும் இருக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால், இந்தியாவில் சுற்றுலா முடித்து செல்பவர்கள் மனதில் போக்குவரத்து நெரிசல் சப்தங்களும், சுற்றி நிலவும் கூச்சலும்தான் நிறைகிறது.
இசையில் முதலீடு செய்யவும், அதில் பணத்தைச் செலவிடுவதையும் இந்தியா நம்புவதில்லை. தற்போது செய்யறிவு வளர்ந்து வரும் சூழலில், நேரடி இசை நிகழ்ச்சிகள் அதற்கான மாற்றத்தின் பகுதியாக இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.
ஃபால்ட் காய் பேசுகையில், “சுயாதீனக் கலைஞர்கள் மீதான முதலீடுகள் அதிகரிக்க வேண்டும். தற்போது ரேப் மற்றும் கானா பாடல்கள் இல்லாத படங்களே இல்லை. நான் ஒரு சுயாதீனக் கலைஞராக, சுயாதீனமான கலைப் படைப்புகளை உருவாக்குவதையே எப்போதும் விரும்புகிறேன்” எனத் தெரிவித்தார்.
Summary
Live music performances are an alternative to AI! – Singer Saras Menon
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






