தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு நிறைவு!

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ’சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு’ பற்றி...

Tourism Summit

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு - TNIE

Published On :

சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் இன்று (செப். 15) நடைபெற்ற ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ நிறைவடைந்தது.

சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றுப் பேசினர்.

மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா, குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.

தொடக்க நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் வரவேற்புரை ஆற்றினார். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா கலந்துகொண்டார்.

இந்த கருத்தரங்கில் ஹரியாணா, மத்தியப் பிரதேசம், லடாக், சத்தீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களின் சுற்றுலா மற்றும் கலாசாரத் துறை அரசுச் செயலர்கள் கலந்துகொண்டு அவரவர் மாநிலங்களின் சுற்றுலாத் துறையின் சிறப்பம்சங்கள் குறித்து உரையாற்றினர்.

மேலும், பிரபல இசைக் கலைஞர்கள், புகைப்படக் கலைஞர்கள், பயண விடியோப் பதிவர் உள்ளிட்ட சமூக ஊடகப் பிரபலங்களும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசினர்.

Summary

The New Indian Express's special tourism seminar concludes!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.