தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு தொடக்கம்!
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸின் ’சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு’ பற்றி...
சுற்றுலா சிறப்பு கருத்தரங்கை குத்துவிளக்கு ஏற்றி தொடக்கி வைத்த மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா. - TNIE
சென்னை: தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் சார்பில் சென்னையில் ‘சுற்றுலா சிறப்பு கருத்தரங்கு 2026’ இன்று (செப். 15) தொடங்கியது.
சென்னையில் உள்ள கிராண்ட் சோழா ஹோட்டலில் நடைபெறும் இந்த கருத்தரங்கில், பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத் துறை அதிகாரிகள் மற்றும் நிபுணர்கள் பங்கேற்றுப் பேசுகின்றனர்.
மத்திய சுற்றுலா அமைச்சகத்தின் நிர்வாக இயக்குநர் சுமன் பில்லா, குத்துவிளக்கு ஏற்றி கருத்தரங்கை தொடக்கிவைத்து சிறப்புரை ஆற்றினார்.
தொடக்க நிகழ்ச்சியில் தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் தலைமைச் செயல் அதிகாரி லட்சுமி மேனன் வரவேற்புரை ஆற்றினார்.
இந்த நிகழ்வில், தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமத்தின் ஆசிரியர் குழு இயக்குநர் பிரபு சாவ்லா கலந்துகொண்டார்.
மேலும் இந்த கருத்தரங்கில் ஹரியாணா, மத்திய பிரதேசம், சத்தீஸ்கர் உள்பட பல்வேறு மாநிலங்களின் சுற்றுலாத் துறை செயலர்களும், நிபுணர்களும் கலந்துகொண்டு உள்நாட்டு சுற்றுலாவின் சிறப்புகள் குறித்து உரையாற்றவுள்ளனர்.
Summary
The New Indian Express Tourism Summit 2026 begins
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




