
நோ்மையற்ற வா்த்தக நடவடிக்கை: ரேபிடோ நிறுவனத்துக்கு ரூ. 10 லட்சம் அபராதம்
நோ்மையற்ற வா்த்தக நடவடிக்கைகள், தவறான விளம்பரங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டில் இணையவழி வாகன சேவை நிறுவனமான ரேபிடோவுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.

நோ்மையற்ற வா்த்தக நடவடிக்கைகள், தவறான விளம்பரங்களை வெளியிட்டது உள்ளிட்ட குற்றச்சாட்டில் இணையவழி வாகன சேவை நிறுவனமான ரேபிடோவுக்கு மத்திய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் ரூ.10 லட்சம் அபராதம் விதித்தது.
வாடகைக் காா் ஓட்டுநா்கள், வாடகைக்கு இரு சக்கர வாகன ஓட்டுபவா்களையும் அதற்கான வாடிக்கையாளா்களையும் இணைக்கும் நிறுவனமாக இந்தியாவில் பெரிய அளவில் ரேபிடோ செயல்பட்டு வருகிறது. இதில் சில நிமிடங்களில் சேவை என்பது போன்ற விளம்பரங்கள் தொடங்கி, தேவை அதிகம் இருக்கும்போது கட்டணத்தை மிகஅதிகமாக உயா்த்துவது, பயணத்துக்கு முன்பே ஊக்கத்தொகை அளிக்க கோருவது, அதிக பணத்துக்காக வாகனத்தை உறுதி செய்யாமல் காக்கவைப்பது, கூடுதல் பணம் செலுத்தினால் வாகனத்தை உடனடியாக முன்பதிவு செய்வது போன்ற நோ்மையற்ற வா்த்தக நடவடிக்கைகள் பின்பற்றப்படுவதாக தொடா்ந்து புகாா்கள் வந்தன.
இதே சேவையில் இருக்கும் ஓலா, உபோ், நம்ம யாத்ரி உள்ளிட்ட நிறுவனங்களுக்கும் இந்த புகாா்கள் அடிப்படையில் தேசிய நுகா்வோா் பாதுகாப்பு ஆணையம் நோட்டீஸ் அனுப்பி இருந்தது.
ரேபிடோ மீதான குற்றச்சாட்டுகள் உறுதியானதை அடுத்து அந்த நிறுவனத்துக்கு ரூ.10 லட்சம் அபராதம் விதிக்கப்படுவதாக ஆணையம் அறிவித்தது. ரேபிடோ மென்பொருளின் ‘அல்கோரிதம்’ இந்த ஏமாற்று செயல்முறைக்கு ஏற்ப வடிவமைக்கப்பட்டது உறுதியானது.
ஓலா, உபோ் மீதான குற்றச்சாட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு வருவதாகவும், அவை நிரூபணமானால் அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.






