மாணவர் பாரதிதாசனுக்கு கல்வி நிதி விடுவிக்கப்படும்! - அமைச்சர் வன்னி அரசுசென்னை குற்றப்பிரிவில் அன்பில் மகேஸ் ஆஜர்!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு 16,577 ஆக உயர்வு! ஒரே நாளில் 244 பேர் பாதிப்பு!‘பாஜகவும் தேர்தல் ஆணையமும் கூட்டு சேர்ந்து சதி’ - ராகுல் காட்டம்!

செப். 20 முதல் வீடுவீடாகச் சென்று பிரசாரம் தொடங்கவுள்ள ஆம் ஆத்மி!

பஞ்சாபில் சூடுபிடித்துள்ள தேர்தல் களம்...

Manish Sisodia

மணீஷ் சிசோடியா - file photo

Published On :

பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது சொந்தத் தொகுதியான துரியில் செப். 20 முதல் வீடு வீடாகச் சென்று மக்களைச் சந்திக்கும் பிரசாரத்திற்குத் தலைமை தாங்க உள்ளதாக ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் மணீஷ் சிசோடியா தெரிவிததார்.

2027-ல் பஞ்சாப் சட்டப்பேரவைக்குத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகளை ஆம் ஆத்மி கட்சி தொடங்கியுள்ளது.

சண்டீகரில் செய்தியாளர்களை சந்திந்த சிசோடியா கூறுகையில்,

இளைஞர் அணி, மகளிர் அணி மற்றும் பட்டியல் சாதியினர் பிரிவு உள்ளிட்ட பல்வேறு குழுக்களையும் வாக்குச்சாவடி அளவிலான குழுக்களையும் ஆம் ஆத்மி கட்சி அமைத்துள்ளது. மாநிலம் முழுவதும் உள்ள 25,332 வாக்குச்சாவடிகளிலும் இந்தக் குழுக்கள் மூலம் பிரசாரம் மேற்கொள்ளப்படும்.

2.68 லட்சம் பேர் கொண்ட வாக்குச்சாவடி குழு உறுப்பினர்கள் மாநிலம் முழுவதும் சென்று, அரசின் வளர்ச்சிப்பணிகள், நிறைவேற்றப்பட்ட நலத்திட்ட வாக்குறுதிகள் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தங்கள் குறித்து மக்களிடம் எடுத்துரைப்பார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வாக்குச்சாவடி தொண்டர்கள், வாக்குச்சவாடி குழு உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் அரசின் சாதனைகளை ஒவ்வொரு வீட்டிற்கும் சென்று மக்களிடம் பேசுவார்கள். கடந்த நான்கரை ஆண்டுகளில் பஞ்சாப் அரசின் செயல்பாடுகளால் மாநிலம் அடைந்த முன்னேற்றம், குடும்பங்கள் பெற்ற பலன்கள், தனிப்பட்ட வாழ்க்கையில் ஏற்பட்டுள்ள மேம்பாடு ஆகியவை குறித்து அவர்களுடன் கலந்துரையாடுவார்கள் என்று அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

ON GOOGLE DISCOVER