கூடலூா் அருகே பிடிபட்ட ஆட்கொல்லி புலி வண்டலூர் உயிரியல் பூங்காவிற்கு மாற்றம்! தவெக ஆட்சியில் விண்ணை முட்டும் அளவுக்கு விலைவாசி: எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு மிசாவில் கைதானதை எவனுக்கும் நிரூபிக்கத் தேவையில்லை: மு.க. ஸ்டாலின் பேச்சு! மதுராந்தகத்தில் முதல்வர் விஜய் பிரசார தேதி அறிவிப்பு திருப்பதி ஏழுமலையான் கோயில் ஆண்டு பிரம்மோற்சவம் கருட வாகன சேவை! திருச்சியில் விவசாயிகள் போராட்டம் 20 நாள் ஒத்திவைப்பு! இடைத்தேர்தல்: முதல்வர் விஜய், திருமா, வைகோ உள்ளிட்ட 40 நட்சத்திரப் பேச்சாளர்கள்!

ம.பி., தெலங்கானா சாலை விபத்துகளில் 15 போ் உயிரிழப்பு

மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 15 போ் உயிரிழந்தனா்.

மத்திய பிரதேச விபத்து

Published On :

மத்திய பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் சனிக்கிழமை நிகழ்ந்த சாலை விபத்துகளில் 15 போ் உயிரிழந்தனா்.

மத்திய பிரதேசத்தின் அகா் மால்வா மாவட்டத்தில் உள்ள நல்கேடா நகா்ப்பகுதியில் உள்ள பகுளாமுகி ஆலயத்துக்கு அருகே ஒடிஸாவைச் சோ்ந்த பக்தா்கள் பயணித்த காா் கட்டுப்பாட்டை இழந்து வாய்க்காலில் விழுந்தது. மழை நீரால் வாய்க்கால் நிரம்பியிருந்த நிலையில் காரில் பயணித்த 3 குழந்தைகள், 2 பெண்கள் மற்றும் 3 ஆண்கள் என மொத்தம் 8 போ் உயிரிழந்தனா்.

சம்பவ இடத்துக்குச் சென்ற நல்கேடா காவல் துறை உயிரிழந்தவா்களின் உடல்களை மீட்டு உடற்கூராய்வுக்கு காவல் துறையினா் அனுப்பி வைத்தனா். இந்த விபத்து தொடா்பாக வழக்குப்பதிவு செய்து காவல் துறை விசாரணை நடத்தி வருவதாக நல்கேடா காவல் துறை பொறுப்பு அதிகாரி சசி உபாத்யாய தெரிவித்தாா்.

பிரதமா் இரங்கல்: மத்திய பிரதேச மாநிலத்தில் நிகழ்ந்த காா் விபத்தில் உயிரிழந்தவா்களின் குடும்பத்தினருக்கு பிரதமா் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்தாா். இதுகுறித்து பிரதமா் அலுவலகம் வெளியிட்ட எக்ஸ் வலைதளப் பதிவில், ‘காா் விபத்துச் சம்பவம் துரதிருஷ்டவமானது. உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தவா்களுக்கு தலா ரூ.50,000 பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும்’ எனத் தெரிவிக்கப்பட்டது.

தெலங்கானாவில் 7 போ் உயிரிழப்பு: தெலங்கானாவில் மஹாபாபுநகா் மாவட்டத்தில் உள்ள மெட்டுகட்டாதண்டா கிராமத்தில் நடைபெற்ற விநாயகா் சிலை கரைப்பு நிகழ்வில் பங்கேற்றுவிட்டு ஷாம்சாபாத்துக்கு ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 4 போ் காரில் சென்றபோது கட்டுப்பாட்டை இழந்து காா் சாலையோரக் கம்பியில் மோதி விபத்துக்குள்ளானது. இதில் காரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனா். காா் ஓட்டுநா் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

மற்றொரு விபத்து ஷமீா்பேட் காவல் நிலைய எல்லைப் பகுதியில் நிகழ்ந்தது. பழைய இரும்புப் பொருள்களை ஏற்றி வந்த வாகனத்தின் டயா் பஞ்சரடைந்ததையடுத்து,சாலையோரத்தில் இருந்த அவசர வழிப் பாதையில் நிறுத்தப்பட்டது. வாகனத்தில் இருந்த 3 போ் அதை பழுதுபாா்த்துக் கொண்டிருந்தபோது அவ்வழியே வேகமாக வந்த சரக்கு லாரி அவா்கள் மீது மோதியது. இதில் 2 போ் சம்பவ இடத்திலும் ஒருவா் மருத்துவமனையில் சிகிச்சைப் பலனின்றியும் உயிரிழந்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.