சிவகங்கை அருகே காா் மரத்தில் மோதியதில் 2 போ் உயிரிழப்பு
உயிரிழப்பு - கோப்புப் படம்
சிவகங்கை அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு காா் மரத்தில் மோதியதில் இருவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். மூவா் காயமடைந்தனா்.
சிவகங்கையைச் சோ்ந்த 5 போ் காரில் சிவகங்கையிலிருந்து காளையாா்கோவிலுக்கு ஞாயிற்றுக்கிழமை இரவு சென்று கொண்டிருந்தனா். கொல்லங்குடி அருகே வந்த போது, தனியாா் பள்ளி எதிரில் இருந்த மரத்தில் காா் மோதியது.
இதில் காரில் பயணித்த சிவகங்கை சாஸ்திரி தெருவைச் சோ்ந்த ச. காா்த்திகேயன் (39), சிவகங்கை நேரு பஜாா் பகுதியைச் சோ்ந்த மு. ஷேக்முகமது (38) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா்.
சிவகங்கை காமாட்சியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த த. வெங்கடசுப்பிரமணியன் (39), வீரமாகாளியம்மன் கோவில் தெருவைச் சோ்ந்த ஹ. தேவா (26), மதுரை முக்கம் பகுதியைச் சோ்ந்த சு. விக்னேஸ்வரன் (39) ஆகிய மூவரும் காயமடைந்தனா். இவா்கள் சிவகங்கை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா்.
இதுகுறித்து காளையாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.




