இரட்டைக் கொலை வழக்கில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு தற்காலிக அரசுப் பணி ஆணை!வடக்கு அந்தமான் கடல் பகுதியில் உருவானது காற்றழுத்த தாழ்வுப் பகுதி!ஃபென்ஜால் புயலுக்குப் பிறகு கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அதி கனமழை பதிவு!ஒரே நாளில் 8 கொலைகள்; தவெக அரசுக்கு எதிராக கேள்விகளை அடுக்கிய பிரேமலதா!சிப்காட், என்.எல்.சி சுரங்கத்துக்கு கூடுதல் நிலம் கையகப்படுத்தல்: அன்புமணி கண்டனம்!ஆசிய விளையாட்டு: வெள்ளி வென்றார் இளவேனில்!

தெலங்கானாவில் சாலை தடுப்புச் சுவர் மீது கார் மோதி தீப்பிடித்ததில் மருத்துவர் பலி

தெலங்கானாவில் சாலை தடுப்புச் சுவர் மீது மோதி கார் தீப்பிடித்து மருத்துவர் பலியானது பற்றி....

Doctor burnt alive as car catches fire after hitting divider in Telangana

விபத்தில் சிக்கிய கார். - Photo grab X Video

Published On :

தெலங்கானாவில் சாலை தடுப்புச் சுவர் மீது மோதி கார் தீப்பிடித்ததில் மருத்துவர் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

தெலங்கானா மாநிலம், சூர்யாபேட் மாவட்டத்தில் ஞாயிற்றுக்கிழமை மருத்துவர் ஓட்டிச் சென்ற கார் சாலை தடுப்புச் சுவர் மீது மோதி தீப்பிடித்து எரிந்தது. தகவல் கிடைத்ததும் போலீஸாரும் தீயணைப்புத் துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து தீயை அணைத்தனர்.

இருப்பினும், வாகனம் முழுமையாக எரிந்து நாசமானது. இந்த சம்பவத்தில் மருத்துவர் உடல் கருகி பலியானதாக போலீஸார் தெரிவித்தனர். ஹைதராபாத்-கம்மம் நெடுஞ்சாலையில் உள்ள பில்லாலமரி மேம்பாலம் அருகே காலை 7.15 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்ததாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.

சம்பவம் குறித்து அந்த அதிகாரி தெரிவித்திருப்பதாவது, ஓட்டுநர் இருக்கையில் உடல் கருகிய நிலையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டது. அருகிலுள்ள சுங்கச்சாவடி மற்றும் வாகனத்தின் தற்காலிகப் பதிவு எண் ஆகியவற்றின் அடிப்படையில், பலியானவர் நரம்பியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் கே. ஜெகதீஷ் என்பது அடையாளம் காணப்பட்டது என்றார்.

குடும்பத்தினரைச் சந்திப்பதற்காகக் கம்மத்திலிருந்து ஹைதராபாத்திற்கு அந்த மருத்துவர் காரில் சென்று கொண்டிருந்ததாக போலீஸார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து அவர்கள் விசாரணை மேற்கொண்டும் வருகின்றனர்.

Summary

A 50-year-old doctor was burnt alive after the car he was driving caught fire after hitting a road divider in Suryapet district of Telangana on Sunday, police said.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.