கடந்த 20 ஆண்டுகளில் 171 ஐஐடி மாணவர்கள் தற்கொலை: சென்னைக்கு 2வது இடம்!தேர்தல் முறையை சிதைக்க பிரதமர் மோடி, அமித் ஷா, ஞானேஷ்குமார் கூட்டுச் சதி: கே.சி. வேணுகோபால்பாட்மின்டனில் வெண்கலப் பதக்கம் வென்ற தமிழக வீரர் ஹரிஹரனுக்கு ரூ. 30 லட்சம் ஊக்கத்தொகை: முதல்வர்காஸாவில் தொடரும் இஸ்ரேலின் தாக்குதல்! 74,000-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை!மாணவர் தற்கொலைக்கான பின்னணி: விசாரிக்க சிறப்புக்குழு அமைத்த ஐஐடி மும்பை!தலைமைத் தேர்தல் ஆணையர் பதவியிலிருந்து ஞானேஷ் குமார் நீக்கப்பட வேண்டும்: மு.க. ஸ்டாலின் வலியுறுத்தல்!பாஜக, ஆர்எஸ்எஸ், தேர்தல் ஆணையம் இணைந்து தேசத்துரோகம்! ராகுல் விமர்சனம்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை மீட்டு தாயுடன் சேர்த்த மீனவர்கள்! விடியோ வைரல்

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை மீனவர்கள் மீட்டு, அதன் தாயுடன் சேர்த்து வைத்தது குறித்து...

Fishermen rescued the elephant calf

யானைக் குட்டியை மீட்ட மீனவர்கள். - படம் - விடியோ க்ளிப்

Published On :

ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட யானைக்குட்டியை மீனவர்கள் மீட்டு, அதன் தாயுடன் சேர்த்து வைத்த விடியோ வைரலாகி வருகின்றது.

மேற்கு வங்கத்தின் மால்பஜார் பகுதியில் உள்ள டீஸ்டா ஆற்றில் திடீரென வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பிறந்து சில நாள்களே ஆன யானைக்குட்டி ஒன்று இந்த வெள்ளத்தில் அடித்துச் சென்றது.

இந்த நிலையில், அந்த யானைக் குட்டியின் தாய் கரையில் நின்று செய்வதறியாமல் திகைத்துப் பார்த்துக் கொண்டிருந்தது. இதனைக் கண்ட அப்பகுதி மீனவர்கள் துரிதமாக செயல்பட்டு, படகின் மூலம் ஆற்றில் அடித்துச்சென்ற யானைக் குட்டியை நோக்கிச் சென்றனர்.

சுமார் 4 முதல் 5 கிலோ மீட்டர் வரை அடித்துச்சென்ற யானைக் குட்டியை படகில் துரத்திச் சென்று, அதனை பத்திரமாக ம்ீட்டு படகில் ஏற்றினர். பின்னர் கரைக்கு வந்து, காத்துக் கொண்டிருந்த தாய் யானையுடன் அதன் குட்டியைச் சேர்த்தனர்.

இந்த நெகிழ்ச்சி சம்பவம் விடியோவாகப் பதிவு செய்யப்பட்டு, இணையத்தில் பகிரப்பட்ட நிலையில், தற்போது அது வைரலாகி வருகிறது. மேலும், இந்த அசாத்திய செயலைச் செய்த மீனவர்களுக்கு இணையவாசிகள் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

Summary

A video showing fishermen rescuing an elephant calf that had been swept away by a river and reuniting it with its mother is going viral.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.