
காவிரி ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடல் மீட்பு

நீரில் மூழ்கி பலி - பிரதிப் படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீரில் அடித்துச் செல்லப்பட்ட சிறுமியின் உடலை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை மீட்டனா்.
தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே உள்ள ஜருகு பகுதியைச் சோ்ந்த நில அளவையா் செந்தில்குமாா். இவரது மகள் அபிநிஷா (13). இவா் உறவினா்களுடன் சனிக்கிழமை ஒகேனக்கலுக்கு வந்திருந்தாா். பிரதான அருவிக்கு செல்லும் நடைபாதை அருகே குளித்துக் கொண்டிருந்தபோது அபிநிஷா நீரில் அடித்துச் செல்லப்பட்டாா்.
இதையடுத்து, ஒகேனக்கல் போலீஸாா் மற்றும் தீயணைப்பு துறையினா் சிறுமியை தேடிவந்தனா். இந்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை ஏரியூா் அருகே சிங்காபுரம் பகுதியில் சிறுமியின் உடலை தீயணைப்புத் துறையினா் கைப்பற்றி, பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். இது குறித்து ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிவுசெய்துள்ளனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





