
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து திடீர் உயர்வு! பரிசல் இயக்கத் தடை நீட்டிப்பு!
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளது தொடர்பாக...

ஒகேனக்கல் - கோப்புப்படம்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து இன்று(ஆக. 30) விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து ஞாயிற்றுக்கிழமை விநாடிக்கு 11,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கர்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக வந்து கொண்டிருக்கிறது.
நீர்வரத்து அதிகரிப்பால் ஒகேனக்கல்லில் உள்ள ஐந்தருவி, ஐவார் பாணி, பிரதான அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க விதிக்கப்பட்ட தடை, தொடர்ந்து 15-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஒகேனக்கல்லுக்கு வரும் நீர்வரத்து அளவுகளை மத்திய நீர்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனர்.
வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை ஒகேனக்கல் அருவி பகுதிக்கு சுற்றுலாப் பயணிகள் அதிக அளவில் வந்துள்ளனர்.
இதனால், தொங்கும் பாலம், முதலைகள் மறுவாழ்வு மையம், வண்ண மீன்கள் காட்சியகம், மீன்கள் விற்பனை நிலையம், உணவு அருந்தும் இடம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டம் நிறைந்து காணப்படுகிறது.
Summary
The water inflow into the Cauvery River at Hogenakkal has increased to 11,000 cubic feet per second today (August 30).
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







