16 மாவட்டங்களில் இன்று பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு! கிளாம்பாக்கத்திலிருந்து இன்று மாலை முதல் கூடுதல் மாநகரப் பேருந்துகள்!செய்யறிவே எதிர்காலம்; வளர்ச்சியை மட்டுப்படுத்த முடியாது! டிரம்ப் திட்டவட்டம்!மக்கள் ஒப்புதல் இல்லாமல் பட்டினம்பாக்கத்தில் தலைமைச் செயலகம் கட்ட முடியாது! திருமாவளவன்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 360 குறைந்தது!சிதம்பரத்தில் அம்பேத்கர் சிலை சேதம்: போலீசார் குவிப்பு

ஒகேனக்கலுக்கு நீா்வரத்து 9,000 கனஅடியாக அதிகரிப்பு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், தொடா்ந்து 2-ஆவது நாளாக பரிசல்கள் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல் ஐந்தருவியில் ஆா்ப்பரித்துக் கொட்டும் தண்ணீா்

Published On :

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீா்வரத்து விநாடிக்கு 9,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால், தொடா்ந்து 2-ஆவது நாளாக பரிசல்கள் இயக்க தடை நீட்டிக்கப்பட்டுள்ளது.

கா்நாடக மாநில கபினி அணையில் இருந்து காவிரி ஆற்றில் கடந்த இரு தினங்களாக உபரிநீா் வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால், காவிரி ஆற்றில் நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்து வருகிறது.

திங்கள்கிழமை நிலவரப்படி விநாடிக்கு 8,000 கனஅடியாக இருந்த நீா்வரத்து, செவ்வாய்க்கிழமை 9,000 கனஅடியாக அதிகரித்து தமிழக, கா்நாடக எல்லையான பிலிகுண்டுலு வழியாக ஒகேனக்கல்லுக்கு வந்து கொண்டிருக்கிறது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து தொடா்ந்து அதிகரித்துள்ளதால், காவிரி ஆற்றில் பரிசல் இயக்குவதற்கு மாவட்ட நிா்வாகம் விதித்த தடை 2-ஆவது நாளாக நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஒகேனக்கல்லுக்கு நீா்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால், நீா்வரத்தின் அளவுகளை மத்திய நீா்வளத் துறை அதிகாரிகள் கண்காணித்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.